scorecardresearch

அஸ்வினை சமாளிக்க புது வியூகம்: ஆஸ்திரேலியாவுக்கு உதவும் டூப்ளிகேட் அஸ்வின்!

இந்திய மண்ணில் அஸ்வின் போன்ற சுற்பந்து வீச்சாளரை சமாளிக்க ஆஸ்திரேலியா டூப்ளிகேட் அஸ்வினை வலைப் பயிற்சியில் களமிறக்கியுள்ளது.

அஸ்வினை சமாளிக்க புது வியூகம்: ஆஸ்திரேலியாவுக்கு உதவும் டூப்ளிகேட் அஸ்வின்!

News about AUS, Ravichandran Ashwin – Mahesh Pithiya in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வருகிற 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்தியா வந்துவிட்டது. அந்த அணி தற்போது பெங்களூருவில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அஸ்வினை சமாளிக்க புது வியூகம்: ஆஸ்திரேலியாவுக்கு உதவும் டூப்ளிகேட் அஸ்வின்!

இந்தியாவில் நடக்கும் போட்டிகள் என்பதால் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏனென்றால், இந்தியாவின் சுழல் மன்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் இந்திய ஆடுகளங்களில் சுழல் வித்தை காட்டி நெருக்கடி கொடுக்கப்பார்கள். அவர்களின் தாக்கமும் இங்கு அதிகம் இருக்கும்.

இதனை முறியடிக்க ஆஸ்திரேலியா புது வியூகத்தை வகுத்துள்ளது. அதன்படி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை போன்று சுழற்பந்து வீசக் கூடிய மற்றும் பந்துவீச்சு ஒற்றுமையைக் கொண்ட மகேஷ் பித்தியா என்ற வீரரை வலை பயிற்சியில் பயன்படுத்தி வருகிறது. அவரும் அஸ்வின் போன்றே பந்துவீசி அவர்களின் பயிற்சிக்கு உதவி வருகிறார். தற்போது அவர் பந்துவீசும் வீடியோ வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

யார் இந்த மகேஷ் பித்தியா?

குஜராத்தில் உள்ள ஜூனாகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தான் மகேஷ் பித்தியா. சுழற்பந்து வீச்சாளரான அவரின் ஆக்சன் எல்லாம் அப்படியே அஸ்வின் போன்றே இருக்கும். 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்திய அணியில் அஷ்வின் விளையாடுவதை முதன்முறையாக பார்த்த மகேஷ் பித்தியா, அவரை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். இதன்பிறகு அஸ்வினைப் போல் பந்துவீசி பயிற்சி செய்து வந்த அவர் தனது முதல் தரப் போட்டியில் கடந்த டிசம்பரில் பரோடா அணிக்காக அறிமுகமானார். தற்போது மகேஷ் பித்தியா ஆஸ்திரேலிய அணிக்கான வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக பந்துகளை வீசி வருகிறார்.

2012ல் இருந்து சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி முகம் கண்டதில்லை. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தத் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, இத்தொடரில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Border gavaskar trophy r ashwin duplicate mahesh pithiya helping aus tamil news

Best of Express