IND vs AUS Test Series: Cheteshwar Pujara Tamil News: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 9-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூரு புறநகரான ஆலூரிலும், இந்திய வீரர்கள் நாக்பூரில் உள்ள மற்றொரு ஸ்டேடியத்திலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸி.-க்கு இந்த முறையும் ‘தண்ணி’ காட்டுவாரா புஜாரா? ரெக்கார்ட் சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுக்குப் பிறகு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட இந்திய வீரராக சேதேஷ்வர் புஜாரா இருக்கிறார். அவரின் அசத்தலான ஆட்டங்களில் பல வலிமைமிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இருந்தது. குறிப்பாக, 2018/19 மற்றும் 2020/21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்த இந்திய அணியில் முக்கிய வீரராக புஜாரா இருந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோர்வடைய வைப்பது முதல் அவர்களின் உடலில் இருந்த சத்துக்கள் உறிஞ்சப்பட்டு துவண்டு போகும் வரை என அவர்களுக்கு ‘தண்ணி’ காட்டினார்.
தற்போது புஜாரா மீண்டும் அதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும், அவர் வைத்துள்ள ரெக்கார்ட்கள் அவர் ஆஸ்திரேலியர்களுக்கு அசச்சுறுத்தும் வீரராகவே பார்க்க்கப்படுகிறார். தற்போதைய இந்திய அணியில், புஜாரா சுழற்பந்து வீச்சை நொறுக்கும் சிறந்த வீரர் என்றால் அது புஜாரா என்று கூறலாம். சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அவர் தனது கால்களை ஆக்ரோஷமாக பயன்படுத்துவதாக அறியப்படுகிறார். மேலும் பந்து வீச்சாளர்கள் அவரைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படுகிறார்கள். அவரால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டு அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க முடியும். பந்துவீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டிய தொடரில், புஜாரா ஸ்கோர் செய்து விடுவார்.

புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 37 இன்னிங்ஸ்களில் விளையாடி சராசரியாக 54 மற்றும் 42 ஸ்ட்ரைக் ரேட்டில் 1893 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் அவர் 5 சதங்களையும், 10 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோரா 204 ரன்கள் உள்ளன.
புஜாரா vs ஆஸ்திரேலியா: ஒரு பார்வை
இன்னிங்ஸ்: 37
ரன்கள்: 1893
சராசரி: 54
ஸ்ட்ரைக் ரேட் விகிதம்: 42
100கள்: 5
50கள்: 10
பார்டர் – கவாஸ்கர் டிராபி: முக்கிய சாதனைகள்
அதிக ரன்கள்
சச்சின் டெண்டுல்கர்: 3262
ரிக்கி பாண்டிங்: 2555
வி.வி.எஸ்.லக்ஷ்மன்: 2434
அதிகபட்ச ரன்கள்
மைக்கேல் கிளார்க்: 329*
விவிஎஸ் லட்சுமணன்: 281
ரிக்கி பாண்டிங்: 257
அதிக சதம்
சச்சின் டெண்டுல்கர்: 9
ஸ்டீவ் ஸ்மித்: 9
ரிக்கி பாண்டிங்: 8
அதிக அரைசதம்
சச்சின் டெண்டுல்கர்: 25
ரிக்கி பாண்டிங்: 20
விவிஎஸ் லட்சுமணன்: 18
ஒரு தொடரில் அதிக ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித்: 2014/15ல் 769
ரிக்கி பாண்டிங்: 2003/4ல் 706
விராட் கோலி: 2014/15ல் 692
அதிக டக் அவுட்கள்
இஷாந்த் சர்மா: 12
அஜித் அகர்கர்: 8
ஜாகீர் கான்: 7
அதிக விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே: 111
ஹர்பஜன் சிங்: 95
நாதன் லியோன்: 94
அதிக 5 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே: 10
ஹர்பஜன் சிங்: 7
நாதன் லியோன்: 7
அதிக 10 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங்: 3
அனில் கும்ப்ளே: 2
கிரெஜா: 1
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள்
ஹர்பஜன் சிங்: 15 விக்கெட்டுகள், 217 ரன்கள், 80.1 ஓவர்கள்
அனில் கும்ப்ளே: 13 விக்கெட்கள், 181 ரன்கள், 64.3 ஓவர்கள்
ஹர்பஜன் சிங்: 13 விக்கெட்கள், 196 ரன்கள், 68.2 ஓவர்கள்
சிறந்த எக்கனாமி
ரவீந்திர ஜடேஜா: 2.22
க்ளென் மெக்ராத்: 2.23
ஸ்டீவ் ஓ’கீஃப்: 2.46
தொடரில் அதிக விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங்: 2000/1ல் 32
ரவிச்சந்திரன் அஸ்வின்: 2012/13ல் 29
ஹில்ஃபென்ஹாஸ்: 2011/12ல் 27
அதிகபட்ச மொத்த ரன்கள்
இந்தியா: 705/7 (டி)
ஆஸ்திரேலியா: 659/4 (டி)
இந்தியா: 657/7 (டி)
குறைந்தபட்ச மொத்த ரன்கள்
இந்தியா: 36
ஆஸ்திரேலியா: 93
இந்தியா: 104
நேருக்கு நேர்
விளையாடிய போட்டிகள்: 102
இந்தியா வென்ற போட்டிகள்: 30
ஆஸ்திரேலியா வென்ற போட்டிகள்: 43
டிரா செய்யப்பட்ட போட்டிகள்: 28
போட்டிகள் சமநிலையில்: 1
முந்தைய 3 தொடர்களின் முடிவுகள்
2016-17 (இந்தியாவில் விளையாடியது) – இந்தியா வென்றது
2018-19 (ஆஸ்திரேலியாவில் விளையாடியது) – இந்தியா வெற்றி பெற்றது
2020-21 (ஆஸ்திரேலியாவில் விளையாடியது) – இந்தியா வெற்றி பெற்றது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil