/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-28.jpg)
wwe, brock lesner, braun Strowman, champion, titleசர்வதேச மல்யுத்த போட்டி, பிராக் லெஸ்னர், பிரான் ஸ்ட்ரோமென், சாம்பியன், டைட்டில்
சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பிராக் லெஸ்னரை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்தியிருப்பதாக தி சன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மல்யுத்த சூப்பர் ஸ்டார் பிரான் ஸ்ட்ரோம்ன் தெரிவித்துள்ளார்.
பிரான் ஸ்ட்ரோமென் இதுதொடர்பாக அந்த செய்தியில் கூறியுள்ளதாவது, என்னால் வீழ்த்தப்படாத மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர். அவரிடம் நான் இரண்டு முறை தோல்வியடைந்துள்ளேன். இந்த முறை லெஸ்னரை வலுவுடன் எதிர்கொள்ள உடலளவில் தயாராகிவிட்டேன். இம்முறை, லெஸ்னரை நிச்சயம் வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை தமக்குள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2017 மற்றும் 2018ம் ஆண்டு சாம்பியன் டைட்டில் போட்டியில், இரண்டு முறையும் லெஸ்னரே வெற்றி பெற்றுள்ளார். இதனால், ஸ்ட்ரோமென் கடும் அதிருப்தியில் இருந்துவந்தார். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், ரோமன் ரெய்ன்சை, 5வது சுற்றிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றார்.
லெஸ்னரை வீழ்த்தி, மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுவேன். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஸ்ட்ரோமென் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் ஷோடவுன் டைட்டில் போட்டியில், பாபி லாஸ்லியை, ஸ்ட்ரோமென் எதிர்கொள்ள உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.