News about IPL, CSK and Dwayne Bravo in tamil: வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர் டுவைன் பிராவோ. கடந்த 2004 ஆம் ஆண்டில் தனது தேசிய அணியில் அறிமுகமான அவர் 40 டெஸ்ட், 164 ஒருநாள், 91 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக 6,423 ரன்களையும், 363 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் தவிர்க்க முடியாத இருந்து வந்த பிராவோ கடந்தாண்டு இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது அணிக்காக இதுவரை டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடியுள்ள அவர், 2012 மற்றும் 2016ல் டி20 பட்டத்தை வென்ற அந்த அணியின் முக்கிய வீரராக இருந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஐபிஎல் தொடரில் களமாடிய பிராவோ தனது அசைக்க முடியதா முத்திரையை பதிவு செய்தார். அவர் முதல் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், அதன் பிறகு 2011 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். ஆனால், அடுத்தாண்டுக்கான அணியில் அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை.
ஐ.பி.எல்-லில் ஓய்வு… சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பு… மறு அவதாரம் எடுக்கும் பிராவோ…
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய டுவைன் பிராவோ, லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், அவரை அணியில் தக்க வைக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அவருக்கு ‘பந்துவீச்சு பயிற்சியாளர்’ என்ற புதிய பொறுப்பை கொடுத்து மகிழ்வித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
ஐபிஎல் 2023 க்கு முன்னதாக அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோவை நியமித்துள்ளதாக சென்னை அணி வெளியிட்ட அறிக்கையில், 2008 ஆம் ஆண்டு தொடங்கிய போட்டியில் இருந்து விளையாடி வரும் பிராவோ, எல் பாலாஜியின் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக ஒரு வருடத்திற்கு ஓய்வு எடுக்க முடிவு செய்த பிறகு அவருக்கு பதிலாக அணியில் இணைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
#ChampionForever 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) December 2, 2022
Official Statement 🔗🔽 @DJBravo47
இந்த புதிய பொறுத்து குறித்து பேசியுள்ள பிராவோ, “இந்தப் புதிய பயணத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் நான் விளையாடும் நாட்கள் முழுவதுமாக முடிந்த பிறகு நான் செய்வதைப் பார்க்கிறேன். நான் பந்துவீச்சாளர்களுடன் பணியாற்றுவதை ரசிக்கிறேன், இது எனக்கு உற்சாகமான பணி. ஆட்டக்காரர் முதல் பயிற்சியாளர் வரை, நான் அதிகம் சரிசெய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால், நான் விளையாடும் போது, நான் எப்போதும் பந்துவீச்சாளர்களுடன் வேலை செய்கிறேன். மேலும் பேட்ஸ்மேன்களை விட ஒரு படி மேலே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் கொண்டு வர முயற்சிக்கிறேன். ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் இனி மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் ஆகியவற்றில் நிற்க மாட்டேன்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக நான் இருப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் ஐபிஎல் வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!” என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவராக பிராவோ உள்ளார். ஆல்ரவுண்டரான அவர் 130 ஸ்டிரைக் ரேட்டில் 1560 ரன்கள் எடுத்துள்ளார்.

பிராவோ 2011, 2018 மற்றும் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் வெற்றிகளிலும், 2014ல் சாம்பியன்ஸ் லீக் டி20 வெற்றியிலும் ஒரு பகுதியாக இருந்தார். ஐபிஎல் சீசனில் இரண்டு முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பர்பிள் கேப்பை வென்ற முதல் வீரர் சாதனையையும் அவர் வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
A song to remember for every season! That’s DjB!
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2022
✍️ your favorite 🕺 moment in 💛#SuperKingForever pic.twitter.com/a5UKvO5a7l
The streets will never forget…💛#ChampionForever 🦁 pic.twitter.com/am3oTQu7Ce
— Chennai Super Kings (@ChennaiIPL) December 2, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil