Advertisment

குஜராத் ரசிகர்களை மீண்டும் வெல்ல ஹர்திக் என்ன செய்ய வேண்டும்? பிரையன் லாரா சூப்பர் பதில்

ஏற்கனவே, கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிய கடுப்பில் ரசிகர்கள் இருக்க, வெற்றிகரமாக வீர நடை போட்ட குஜராத்தை பாதி வழியில் விட்டுவிட்டு வந்து விட்டார் என்கிற கோபத்தில் கொந்தளித்துப் போயிருந்தனர் ரசிகர்கள்.

author-image
WebDesk
New Update
Brian Lara on What should Hardik Pandya do to win Gujarat Titans fans back Tamil News

2022ல் குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Hardik Pandya | GT vs MI | Mumbai Indians | Gujarat Titans | IPL 2024: ஐ.பி.எல். 2024 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவர் முந்தைய இரண்டு (2022 -2023) சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார். 2022ல் குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். 

Advertisment

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அவரை டிரேடு முறையை மாற்றிக்கொள்ள கேட்க அவர், தான் வந்தால் கேப்டனாகத் தான் வருவேன் என கண்டிஷன் போட்டார். அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மும்பை நிர்வாகம், அவர்களின் அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்தவரும், ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான கேப்டனுமான ரோகித்தை நீக்கிவிட்டு  ஹர்திக் பாண்டியாவுக்கு பதவி உயர்வு கொடுத்தனர். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: What should Hardik Pandya do to win Gujarat Titans fans back? ‘Play for India…’, quips Brian Lara

இந்த உத்வேகத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய லீக் ஆட்டத்தில் தனது முன்னாள் அணியான குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மும்பை இந்தியன்சை வழிநடத்தினார் ஹர்திக். ஏற்கனவே, கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிய கடுப்பில் ரசிகர்கள் இருக்க, வெற்றிகரமாக வீர நடை போட்ட குஜராத்தை பாதி வழியில் விட்டுவிட்டு வந்து விட்டார் என்கிற கோபத்தில் கொந்தளித்துப் போயிருந்தனர் ரசிகர்கள். 

இப்படியான சூழலில் மும்பை அணியுடன் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்களை முழுக்கமிட்டனர் மோடி ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள். அவருக்கு எதிராக ரசிகர்கள் அப்படி கோஷங்களை எழுப்பியது ஒருமுறை இரண்டு முறை அல்ல. அவரைப் பார்க்கும் போதும், டி.வி-யில் காட்டும் போதும், போட்டி தொடங்கும் முன் பின் அவர் மைக் பிடித்து பேசும்  போதும், டிரெஸ்ஸிங் ரூமுக்குக்கு செல்லும் போதும் என அவர் முகம் தென்படும் இடங்களிலும் கோபக் கனலை அள்ளித் தெளித்தனர்.  

இந்த போட்டியின் ஒரு தருணத்தில், ஹர்டிக் பாண்டியா பந்தை பிடிக்க டைவ் செய்தபோது, ​​​​பந்து பவுன்ஸ் ஆகி அவரை கடந்து சென்றது. அப்போது மீண்டும் ரசிகர்கள் அவருக்கு எதிரான கோஷத்தை எழுப்பினர். இந்த சம்பவம் நடந்தபோது, ​​​​வர்ணனையில் இருந்த ஜாம்பவான் வீரர் இயன் பிஷப் மிகவும் ஆச்சரியப்பட்டார். மேலும் அவர் "ரசிகர்கள் மனதை அவர் மீண்டும் வெல்ல அவர் என்ன செய்ய வேண்டும்?" என்கிற கேள்வியை வைத்தார். 

அந்த நேரத்தில் இயன்  பிஷப்புடன் வர்ணனைப் இருந்த மற்றொரு ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா, "அடுத்த முறை அவர்கள் இங்கு விளையாடும்போது இந்தியாவுக்காக விளையாடுவது போல் ஆட வேண்டும். " என்று பதிலளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gujarat Titans Mumbai Indians Hardik Pandya IPL 2024 GT vs MI
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment