Advertisment

முக்கிய பதவியை பிடிக்கும் பிரிஜ் பூஷனின் மகன், உதவியாளர்: 'மீண்டும் போராட்டத்தில் குதிப்போம்' - மல்யுத்த வீரர்கள் எச்சரிக்கை

இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வாங்கிக் கொடுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோர் மீண்டும் தாங்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

author-image
WebDesk
New Update
 Brij Bhushan son aide back at helm and wrestlers threaten protest Tamil News

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பதவி விலகினார் பிரிஜ் பூஷன் சரண் சிங்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Wrestlers Protest: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக இருந்தவர் பா.ஜ.க. எம்பி. பிரிஜ் பூஷன் சரண் சிங். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறி வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

Advertisment

ஆனாலும் தனது விசுவாசிகள் மூலம் முக்கிய பதவிகளை கைப்பற்றி அவர்கள் மூலம் தனக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அவ்வகையில், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைதடையை நீக்கியதால், பிரிஜ் பூஷனின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளில் ஈடுபட உள்ளார். 

இதேபோல், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங் உத்தரப் பிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால், இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வாங்கிக் கொடுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோர் மீண்டும் தாங்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள வீடியோவில், "2-3 நாட்களுக்கு முன்பு, பிரிஜ் பூஷனின் மகன் உ.பி. மல்யுத்த அமைப்பின் தலைவரானார். ஆனால் அவரது குடும்பத்தில் இருந்து யாரும் மல்யுத்த நிர்வாகத்திற்கு வரமாட்டார்கள் என்றும், பிரிஜ் பூஷன் அல்லது அவரது உறவினர்கள் அல்லது கூட்டாளிகள் விளையாட்டை நிர்வகிக்க மாட்டார்கள் என்றும் அரசாங்கம் உறுதியளித்து இருந்தது. 

இதுகுறித்து அரசாங்கம் விரைவில் முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, அரசாங்கம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு இடைக்கால தடை வழங்கியிருந்தாலும், அந்த அமைப்பு தேசிய அளவிலான போட்டிகளை புனேவில் நடத்தியது. இதேபோல் அந்த அமைப்பு அதன் மாநில தேர்தல்களையும் நடத்தியுள்ளது. 

இந்திய மல்யுத்த சம்மேளனம் தனது அமைப்பு அரசாங்கத்தை விட பெரியதாக நினைக்கிறது. மல்யுத்த வீரர்களான நாங்கள் எங்களை ஆதரிக்கும் விவசாயிகள் குழுக்கள், பஞ்சாயத்து நிர்வாகிகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளுடன் பேசி அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முடிவெடுப்போம். மீண்டும் போராட்டங்களைத் தொடங்க எங்களை வற்புறுத்த வேண்டாம் என்று நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் கூறியிருக்கிறார். 

நேற்று புதன்கிழமை, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இயக்க அனுமதித்தால், நாங்கள் மீண்டும் தெருவில் போராட்டத்தில் ஈடுபட இறங்குவோம். சஞ்சய் சிங் சர்வதேச மல்யுத்த அமைப்புடன் சில ஒத்துழைப்பை செய்து, இடைக்கால தடையை நீக்கிவிட்டார். நான் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன், ஆனால் பிரிஜ் பூஷனையும் அவரது ஆதரவாளர்களையும் கூட்டமைப்பை நடத்தவும், பெண் மல்யுத்த வீரர்களை தொந்தரவு செய்யவும் நான் அனுமதிக்க மாட்டேன். அடுத்த சில நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருடனும் பேசி எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். பிரிஜ் பூஷனுடன் தொடர்புடையவர்களை இந்திய மல்யுத்த சம்மேளனத்திலிருந்து நீக்கிவிட்டு, தூய்மையான மற்றும் திறமையான ஒருவரை முதலிடத்தில் வைக்குமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன், ”என்று கூறினார்.

இது தொடர்பாக உ.பி. சங்க தேர்தலை கண்காணித்து வருபவரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பொருளாளருமான சத்யபால் தேஷ்வால், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “தேர்தலில் தேர்தல் அதிகாரி ஒருவர் இருந்தார். தலைவர் பதவிக்கு கரண் மட்டுமே போட்டியிட்டார். 15 நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலச் சங்கத் தேர்தலில் காரனுக்குப் போட்டியிடுவதற்குத் தடை எதுவும் இல்லை. அவர் உ.பி மல்யுத்த தலைவராக இருப்பதால், அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட செயல்பாட்டில் ஈடுபடுவார் என்று அர்த்தமில்லை.

நவாப்கஞ்சில் உள்ள கல்லூரி மண்டபத்தில் - தேர்தல் நடைபெறும் இடத்தில் பிரிஜ் பூஷன் இல்லை. பிரிஜ் பூஷன் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார். அவர் இனி உ.பி. மல்யுத்தம் சங்கம் அல்லது இந்திய மல்யுத்த சம்மேளனம் உடன் தொடர்புடையவர் அல்ல. தேர்தல் நடைமுறையில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே மல்யுத்த வீரர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்க எந்த காரணமும் இருக்கக்கூடாது. எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் உட்பட அனைத்து மல்யுத்த வீரர்களும் விசாரணைக்கு ஆஜராகுமாறும், பாரபட்சம் காட்டப்பட மாட்டோம் என்றும் உறுதியளிக்கிறேன். மல்யுத்த வீரர்கள் எதிர்காலத்தில் புகார் செய்ய எந்த காரணமும் இல்லை என்பதை இந்திய மல்யுத்த சம்மேளனம் உறுதி செய்யும்,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Brij Bhushan’s son, aide back at helm, wrestlers threaten protest

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Wrestlers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment