Advertisment

சேப்பாக்கத்தில் கருப்பு மண் ஆடுகளம்: 3 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குமா இந்தியா?

நேற்று மைதான ஊழியர்கள் ஆடுகளத்தின் மீது இருந்த புற்களை நீக்கிய நிலையில், ஆடுகளம் பழுப்பு நிறத்தில் காட்சியளித்தது. மேற்பரப்பில் பெரும்பாலும் கறுப்பு மண் தென்பட்டது.

author-image
WebDesk
New Update
Brown black soil pitch in Chepauk India to play three spinners vs Australia World Cup 2023

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் போது எந்த வகையான ஆடுகளம் (பிட்ச்) பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Worldcup 2023 | india-vs-australia | chepauk: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில்  நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய  நியூசிலாந்து அபார வெற்றியை ருசித்தது. 

Advertisment

இந்தியா - ஆஸி,. மோதல் 

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் போது எந்த வகையான ஆடுகளம் (பிட்ச்)  பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. நேற்று மைதான ஊழியர்கள் ஆடுகளத்தின் மீது இருந்த புற்களை நீக்கிய நிலையில், ஆடுகளம் பழுப்பு நிறத்தில் காட்சியளித்தது. மேற்பரப்பில் பெரும்பாலும் கறுப்பு மண் தென்பட்டது. சென்னையில் இந்திய அணிக்கு இதுபோன்ற ஆடுகளம் தான் வழக்கமாக தயார் செய்யப்படும். எனவே, ஆடும் லெவனில் இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமாடும். 

அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, மைதான ஊழியர்கள் நேற்று மதியம் முழுவதும் ஆடுகளம் உடைந்து விடாமல் இருக்க தார்பாய்களைக் கொண்டு மூடி வைத்திருந்தனர். இந்திய அணியின் பயிற்சிக்குப் பிறகு, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆடுகளத்தின் மேற்பரப்பை உற்றுப் பார்த்தார்கள். மாலையில், ஆடுகளத்தை மூடியிருந்த தடிமனான தார்பாய் அகற்றப்பட்ட உடனேயே, சில நிமிடங்கள் ரோலர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆடுதளத்தின் மேல் நீர் பாய்ச்சவில்லை. நிலைமை மாறாமல் இருக்கும் பட்சத்தில், ஆடுகளம் வறண்டதாகவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாகவும் இருக்கும்.

ஆங்கிலத்தில் படிக்க: World Cup 2023: Brown black soil pitch may prompt India to play three spinners vs Australia

 ​உலகக் கோப்பை அணியில் அக்சர் படேலுக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் வீரராக வலைப் பயிற்சி செய்ய களமாடினார். அதன்பிறகு ஜஸ்பிரித் பும்ரா வந்தார். இவர்களுடன் இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு தலைமைப் பயிற்சியாளரான டிராவிட் த்ரோ டவுன்களை அடித்தார். சுமார் 45 நிமிட பயிற்சியின் போது, அஸ்வின் நீண்ட நேரம் சூர்யகுமார் யாதவ் மற்றும் கோலிக்கு பந்து வீசினார். மேலும் அவரது தந்திரம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளால் அவகளை தொந்தரவு செய்தார்.

கேப்டன் ரோகித் அணியில் ஆழமான பேட்டிங் விருப்பம் இருக்கும் வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவின் வேகப்பந்துவீச்சு விருப்பத்துடன், 3 ஸ்பின்னர்கள்/ 3 வேகப்பந்து வீச்சாளர்களின் கலவையை இந்தியா மாற்றியமைக்க உள்ளது. அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர், பேட்டிங்கில் திறமையானவர்கள். எனவே, அவர்கள் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கப் போட்டியிடுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Chepauk Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment