Advertisment

கோலியை புகழ்ந்த பும்ரா.. டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை.. டாப் 5 செய்திகள்

இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
கோலியை புகழ்ந்த பும்ரா.. டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை.. டாப் 5 செய்திகள்

பெலாரஸ் உடனான கால்பந்து போட்டி: ரத்து செய்தது இந்திய அணி

Advertisment

மார்ச் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுயிருந்த பெலாரஸ் உடனான கால்பந்து போட்டியை இந்திய ஆடவர் அணி ரத்து செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 7-ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு , ஃபிபா , சர்வதேச தடகள கூட்டமைப்பு  ஆகியவவை ஏற்கனவே ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில்  மார்ச் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுயிருந்த  பெலாரஸ்  உடனான  நட்பு ரீதியிலான கால்பந்து  போட்டியை இந்திய ஆடவர் அணி ரத்து செய்துள்ளது. 

இது குறித்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு கூறுகையில், ‘சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலின் பெயரில் பெலாரஸ்  உடனான  நட்பு ரீதியிலான கால்பந்து  போட்டியை நாங்கள் ரத்து செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச டென்னிஸ் போட்டிகள்: ரஷ்யா,

பெலாரஸ் அணிகளுக்கு இடைக்கால தடை

உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்தது. 

இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகள் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் உறுப்பினர் மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாகத் தடை விதித்துள்ளதாக அறிவித்தது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், உக்ரைன் மக்களுடன் இந்த கடினமான காலத்தில் துணை நிற்பதாக கூறியுள்ளது.

அதேநேரம் ரஷ்ய கொடியை பயன்படுத்தாமல் ரஷ்ய வீரர்கள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு

15-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்து, சீனா, நியூசிலாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தையும் (ஜூலை 3), 2-வது ஆட்டத்தில் சீனாவையும் (ஜூலை 5), கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தையும் (ஜூலை 7) எதிர்கொள்கிறது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்:

2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து  உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-ஆவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகிற 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்த நிலையில் ரங்கியாராவில் நேற்று நடந்த தனது 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 258 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்ட்ராகர் 3 விக்கெட்டும், மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

கோலிக்கு 100-ஆவது டெஸ்ட்: பும்ரா புகழாரம்

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது.

இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உங்களது தேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனையாகும்.

ரஷ்ய அணிகளுக்கு தடை.. 2-வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி.. மேலும் செய்திகள்

இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த சான்று. அவருக்கு இது இன்னொரு பெருமைப்படத்தக்க சாதனையாகும்.

விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்களிப்பை அளித்திருக்கிறார். வருங்காலத்தில் இன்னும் நிறைய பங்களிப்பார். அவருக்கு வாழ்த்துகள் என்றுபும்ரா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sports Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment