பும்ராவின் கம்பேக்.. நம்பிக்கை தெரிவிக்கும் ட்ரெண்ட் போல்ட்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் சனிக்கிழமை நடந்த ஐபிஎல் 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக மோசமாக பந்துவீசி 43 ரன்கள் வாரி வழங்கினார். இதனால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் பார்ம் அவுட்டில் இருக்கிறார் என்று…

By: September 23, 2020, 4:42:59 PM

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் சனிக்கிழமை நடந்த ஐபிஎல் 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக மோசமாக பந்துவீசி 43 ரன்கள் வாரி வழங்கினார். இதனால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் பார்ம் அவுட்டில் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக பும்ரா களமிறக்கப்படுவது குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பும்ராவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்.

இதுதொடர்பாக அவர், “பும்ரா ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவர் தன்னுடைய பழைய ஆட்டத்தை கொண்டுவர கடந்த சில நாட்களாக முயற்சி செய்கிறார். வரவிருக்கும் ஆட்டங்களில் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். அவர் எங்களுக்கு ஒரு பெரிய வீரர் மற்றும் மிக முக்கியமான பந்து வீச்சாளர், அவர் மிக நேர்த்தியாக திரும்பி வருவார். மும்பை அணிக்காக என்னுடன் சேர்ந்து வெற்றிகரமான கூட்டணியை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.

அவர் மட்டுமல்ல, மற்றவர்களுடன் சேர்ந்து பந்து வீசும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் உற்சாகமானது மற்றும் கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பும்ரா வயதில் சிறியவனாக இருந்தாலும் அவருக்கு சில அற்புதமான திறன்கள் கிடைத்துள்ளன. அவருடன் இணைந்து அணிக்காக சில வெற்றிகளைப் பெறுவேன் என்று நம்புகிறேன்” என்றவர், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்காதது குறித்து பேசுகையில், “நியூசிலாந்தில் இருந்து அங்கிருக்கும் குளிர்காலத்துக்கு இடையே, தனிமைப்படுத்தலுக்கு பிறகு நான் இங்கு வந்துள்ளேன்.

நான் கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அந்த வகையில் எனது பார்வையில் நான் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை மிகவும் வேறுபட்டவை. எவ்வாறாயினும், துல்லியமாக பந்துவீசுவதை வரவிருக்கும் ஆட்டங்களில் காண்பிப்பேன். அதையே அடுத்த இரண்டு விளையாட்டுகளில் நாங்கள் செய்யப்போகிறோம். நேர்மையாக இருப்பது விளையாட்டின் மிகப்பெரிய சவால். அதுவும் டி20 போட்டிகளில் செட்டான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கடைசி ஓவர்களில் பந்து வீசுவது மிகவும் கடினம். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன், என் பலத்துடன் ஒட்டிக்கொள்ள விரும்புகிறேன், யார்க்கர்களை முயற்சித்து செயல்படுத்தவும், அதிலிருந்து வேகத்தை எடுக்கவும் முயற்சிக்கவும், பேட்ஸ்மேன்களுக்கு முன்னால் இருக்கவும் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Bumrah is a world class bowler says trent boult

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X