பும்ராவுக்கு மாற்று வீரர் இவரா? தீயாய் பரவும் கிரிக்கெட் மீம்ஸ்

பும்ரா இந்திய அணிக்கு தாமதமாகத் திரும்புவது குறித்த ட்விட்டர் வாசிகள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Bumrah to miss IPL 2023, big Blow for MI, twitter reactions in tamil
Twitter bursts into meme fest amid reports of India pacer's Jasprit Bumrah delayed return

Indian pacer Jasprit Bumrah Tamil News: இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அணியில் இருந்து வெளியேறினார். இதனால், 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். வங்கதேசம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் அவர் இந்தியாவுக்காக விளையாடவில்லை.

இந்நிலையில், பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி WTC final) இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்து, அவர் ஐபிஎல்-ல் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ராவின் காயம் அதை விட மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் இந்த இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை கொடுப்பதாக உள்ளது.

Jasprit Bumrah

பும்ரா இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை, எனவே விளையாட்டில் இருந்து நீண்ட ஓய்வை எதிர்பார்க்கிறார். ஆசியக் கோப்பையில் விளையாடாவிட்டால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக பும்ரா திரும்புவதற்கு தயாராகிவிடுவார் என இந்திய அணி இப்போது நம்புகிறது.’ என்று கிரிக்பஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பும்ரா இந்திய அணிக்கு தாமதமாகத் திரும்புவது குறித்த ட்விட்டர் வாசிகள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

பும்ராவுக்கு மாற்று வீரர் இவரா? தீயாய் பரவும் கிரிக்கெட் மீம்ஸ்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Bumrah to miss ipl 2023 big blow for mi twitter reactions in tamil

Exit mobile version