BWF World Championships 2019 Final, PV Sindhu vs Nozomi Okuhara updates: 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறார்.
2017, 2018-ம் ஆண்டுகளிலும் சிந்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தார். ஆனால் அவ்விரு இறுதி ஆட்டங்களிலும் தோற்று வெள்ளிப்பதக்கமே பெற்றார். 42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இதுவரை எந்த இந்தியரும் தங்கப்பதக்கத்தை வென்றதில்லை என்ற ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளவும், இந்தியாவின் பல ஆண்டு கனவை நனவாக்கவும் சிந்துவுக்கு இன்று அருமையான வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.
தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் சிந்து, இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நோசோமி ஒகுஹராவுடன் மோதின. இதில், முதல் செட்டின் முதல் ஷாட்டில் இருந்து ஆக்ரோஷத்தை தொடங்கிய சிந்து 21-7, 21-7 என்ற புள்ளிகள் கணக்கில் மெகா வெற்றிப் பெற்று, முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருக்கிறார்.
மு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும் காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, “இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும்” என வாழ்த்தியுள்ளார்.
21-7, 21-7 என்ற புள்ளிகள் கணக்கில் உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரை வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்தார் பிவி சிந்து.
ஈவு இரக்கமில்லாத அடி… மரண அடி… மாவுக்கட்டு அடி… ஆத்தாடி!!
14-4 என்ற புள்ளிகள் கணக்கில், இரண்டாவது செட்டிலும் சிந்து முன்னிலை…
இல்லை, இல்லை ஒன்சைட் வெற்றியை நோக்கி பிவி சிந்து.
இரண்டாவது சுற்றில் சிந்து 11-4 என்ற கணக்கில் லீடிங்கில் உள்ளார்.
யப்பா அந்த ஜப்பான் பொண்ணு பொட்டிப்படுக்கையை எடுத்துக் கட்டுப்பா… யம்மா நீ இன்னும் கோர்ட்டுக்குள்ள என்ன பண்ற?
சிந்துவின் அட்டாக்கிங் ஷாட்டால், ஜப்பானின் ஒகுஹரா கோர்ட்டின் நாலா பக்கமும் பறந்து பறந்து விளையாட வேண்டியிருக்கிறது. அவரை பார்க்க நமக்கே பரிதாபமாகத் தான் உள்ளது.
இரண்டாவது சுற்று தொடங்கியது. அதிலும் சிந்து 5-2 என முன்னிலையில் உள்ளார்.
அவ்வளவு வெறி மேடமுக்கு!! ம்ம்ம்!!
சிந்துவும், ஒகுஹராவும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 8-ல் சிந்துவும், 7-ல் ஒகுஹராவும் வெற்றி கண்டுள்ளனர். 2017-ம் ஆண்டு உலக பேட்மிண்டன் இறுதி சுற்றில் இதே ஒகுஹராவிடம் தான் சிந்து தோல்வியை தழுவினார். அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்ப்பாரா?
அட்டாக், டிபன்ஸ் என இரு பிரிவிலும் சிந்து புகுந்து விளையாடியதே, முதல் செட்டை இவ்வளவு புள்ளிகள்(21-7) வித்தியாசத்தில் சிந்துவால் வெல்ல முடிந்தது.
அடக்கடவுளே நம்ம சிந்துவா இது!! 21-7 என்ற புள்ளிகள் கணக்கில் நோசோமியை துவம்சம் செய்துவிட்டார். மொத்தம் 13 கேம் புள்ளிகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
வெறும் 16 நிமிடத்தில் முதல் செட்டை 21-7 என பிவி சிந்து கைப்பற்றி இருக்கிறார்.
சிந்துவிடம் இருந்து இப்படியொரு ஆக்ரோஷத்தை ஜப்பான் வீராங்கனை ஒகுஹரா எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் களத்தில் அவர் நிற்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமே.. ஏன், அவருக்கும் கூட…
முதல் செட்டிலேயே சிந்து மிக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 11-2 என்ற புள்ளிகள் கணக்கில் நோசோமியை மிரள வைத்திருக்கிறார்.