இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பிப்ரவரி 2019 இல் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தார். தற்போது அந்நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சராக வாய்ப்பு பெற்றுள்ளது.
பெங்களூரு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கேலக்டஸ் ஃபன்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு 33.32 லட்சத்திற்கு மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வழங்கியுள்ளது. ஆன்லைன் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (எம்.பி.எல்) கேலக்டஸ் எம்-லீக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது சிங்கப்பூரில் ஏப்ரல் 2018 இல் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 17, 2020 அன்று, எம்.பி.எல் ஸ்போர்ட்ஸை இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் மற்றும் உத்தியோகபூர்வ வர்த்தக பங்காளராக பி.சி.சி.ஐ அறிவித்தது. இந்த மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின்படி, இந்திய ஆண்கள், பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் எம்.பி.எல் ஜெர்சிகளை விளையாடும். தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி எம்.பி.எல் ஸ்போர்ட்ஸுக்கு உரிமம் பெற்ற ஜெர்சி மற்றும் பிற பொருட்களையும் பயன்படுத்தி வருகிறது.
2020 ஜனவரியில் கோஹ்லி எம்.பி.எல் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார். இதற்கான அவருக்கு 68 சி.சி.டி.களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொன்றும் ரூ .48,990 (ரூ. 33.32 லட்சம்) பிரீமியத்தில் வழங்கப்பட்டது. இந்த சி.சி.டி கள் 10 ஆண்டுகளின் முடிவில் பங்குகளாக மாற்றப்படும். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்திக்குறிப்பில், பிப்ரவரி 5, 2019 அன்று கோலிக்கு சி.சி.டி.க்கள் வழங்கப்பட்ட அதே அசாதாரண பொதுக் கூட்டத்தில், கார்னர்ஸ்டோனின் தலைமை நிர்வாக அதிகாரி அமித் அருண் சஜ்தே கேலக்டஸ் ரூ .1666 லட்சம் மதிப்புள்ள 34 சி.சி.டி.களை கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் எல்.எல்.பி கோலிக்கு வழங்கினார்.
இதனுடன் சேர்த்து மாக்பி வென்ச்சர் பார்ட்னர்ஸ் எல்எல்பி ஸ்போர்ட்ஸ் எல்எல்பி என மேலும் இரண்டு நிறுவனங்களில் கோலி பங்குதாரராக உள்ளார் - கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நிறுவனம், இந்திய வீரர்களான கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் சுப்மான் கில் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களை நிர்வாகித்து வருகிறது. இது தொடர்பாக சஜ்தே தொடர்பு கொண்டபோது, எம்.பி.எல் இணைப்பில் தவறில்லை “விராட் விரும்பும் பல தொழில்களில் முதலீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிசிசிஐ சார்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்.சி.எல் மற்றும் கார்னர்ஸ்டோன் நிறுவனத்தில், கோலிக்கு பங்கு இருப்பதை இந்திய கிரிக்கட் வாரியம் அறியவில்லை. "வீரர்களின் முதலீடுகளை நாங்கள் கண்காணிப்போம் என்று கூற முடியாது மேலும் இந்திய கிரிக்கெட்டில், விராட்கோலி, ஒரு செல்வாக்கு மிக்கவர், என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து கொண்டு ஆதாயம் தரும் வகையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அதே நிறுவனம் ஸ்பான்சராகவும் இருப்பதால் ஆதாயம் தரும் இரட்டை வணிக நலன் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"