என் வாழ்நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இப்படி பார்ப்பேன் என நினைக்கவே இல்லை: கூப்பர் வேதனை
பெரிய போட்டிகளுக்கு தகுதிபெற முயற்சிக்கும் நாளை தனது வாழ்நாளில் காண்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் உதவிப்பயிற்சியாளர் கார்ல் ஹூப்பர் கூறியுள்ளார்.
பெரிய போட்டிகளுக்கு தகுதிபெற முயற்சிக்கும் நாளை தனது வாழ்நாளில் காண்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் உதவிப்பயிற்சியாளர் கார்ல் ஹூப்பர் கூறியுள்ளார்.
ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு தயாராகும் வெஸ்ட் இண்டீஸ் அணி.
Carl Hooper on West Indies cricket team Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் மிக பிரபலமான அணிகளுள் ஒன்று வெஸ்ட் இண்டீஸ். ஏராளமான ஜாம்பவான் வீரரர்களையும், சாம்பியன் வீரர்களையும் உருவாக்கிய அந்த அணி 70, 80-களில் ஆதிக்கம் செலுத்தியது. 1975ல் அறிமுக செய்யப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தொடர்ந்து 2 முறையை கைப்பற்றி பிரம்மிப்பை ஏற்படுத்தினர்.
Advertisment
வெஸ்ட் இண்டீஸ் என்பது தனி நாடு கிடையாது. வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடல் ஆகியவற்றால் சூழப்பட்ட வட அமெரிக்காவின் 13 சுதந்திர தீவுகளை உள்ளடக்கியது. இந்த தீவுகளை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்த அப்போதைய கேப்டன் கிளைவ் லாயிட் ஒரு சாம்பியன் அணியைக் கட்டமைத்தார். அவருக்குப் பின் வழிநடத்திய விவியன் ரிச்சர்ட்ஸ் அணியின் பழைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியவில்லை. பிறகு மெல்ல மெல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மங்க தொடங்கியது.
எனினும், நவீன கிரிக்கெட் கால கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சமி, போலார்ட், கெயில், பிராவோ, பிராத்வெயிட் போன்ற சாம்பியன் வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 என்ற 2 டி20 உலகக் கோப்பைகளை வென்று அசத்தியது. அப்போது விளையாடிய சாம்பியன் வீரர்கள் சிலர் இப்போது ஓய்வுக்குச் சென்று விட்டனர்.
Advertisment
Advertisements
இதனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீண்டும் மங்க தொடங்கியுள்ளது. உதாரணமாக கடந்த டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறினர். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த எந்த ஐசிசி போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டி வரை முன்னேறவில்லை. ஒரு காலத்தில் இதுபோன்ற தொடர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தற்போது கத்துகுட்டி அணிகளுடன் தகுதிச் சுற்றில் விளையாடி வருகிறது.
ஹூப்பர் வேதனை
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து அணியின் உதவிப் பயிற்சியாளர் கார்ல் ஹூப்பர் தெரிவித்துள்ளார். மிகவும் வருத்தப்பட்டு பேசியுள்ள அவர், தனது அணி பெரிய போட்டிகளுக்கு தகுதிபெற முயற்சிக்கும் நாளை தனது வாழ்நாளில் காண்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறியுள்ளார்.
கார்ல் ஹூப்பர் இ.எஸ்.பி.என் கிரிக்இன்போ-வுக்கு (ESPNcricinfo) அளித்துள்ள பேட்டியில், "எங்களது நிலை மாறவில்லை, விஷயம் என்னவென்றால், இதை விட நாம் கீழே செல்லலாமா? ஆம், இதை விட நாம் கீழே செல்லலாம். தகுதி பெறவில்லை என்றால், நாம் ஒரு படி கீழே தான் செல்லுவோம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய போட்டிகளுக்கு தகுதிபெற முயற்சிக்கும் நாளை என் வாழ்நாளில் காண்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த டி20களில் அதை கடக்க நாங்கள் போராடினோம். இப்போது இதோ ஜிம்பாப்வேயில் இருக்கிறோம்.
நான் மற்ற அணிகளை அவமரியாதை செய்யவில்லை. ஆனால் நாங்கள் அமெரிக்கா, நேபாளம் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுகிறோம். ஆப்கானிஸ்தான் கூட எங்கள் அணியை விட முன்னிலையில் உள்ளது, வங்கதேசம் எங்களை விட முன்னேறியுள்ளது. எனவே, இது வேதனையானது, நாம் கீழே செல்லலாமா? ஆம், நாம் கீழே செல்லலாம். நீங்கள் சரியான விஷயங்களைச் செய்யத் தொடங்கும் வரை, நீங்கள் கீழே செல்லலாம் என்பதை இந்த விளையாட்டு உங்களுக்கு நினைவூட்டுகிறது.
நான் முன்பே சொன்னது போல், இந்த நாளைக் காண நான் வாழ்வேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இங்கே நான் ஜிம்பாப்வேயில் இருக்கிறேன். நாங்கள் அமெரிக்காவை வெல்ல முயற்சிக்க வேண்டும்.
அதற்காக நாங்கள் தயார் நிலையில் தான் இருக்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு உணர்வைப் பெறுவீர்கள், மேலும் அணியில் உள்ள ஆற்றலுக்கான அதிர்வைப் பெறுவீர்கள். டேரன் சாமி, உங்களுக்குத் தெரிந்தபடி, ஒரு அற்புதமான, ஊக்கமளிக்கும் தலைவர் என்று நான் நினைக்கிறேன். இப்போது அவர் அணியை தகுதிச் சுற்றில் சேர்க்க முயற்சிக்கிறார், அது எங்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும்.எனவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 20 சதங்களும், 300 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil