ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025-இல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் 20.6 கோடி ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். உலகக் கோப்பையைத் தவிர, இது பிராட்கேஸ்டிங் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்(BARC) வரலாற்றில் அதிக ரசிகர்கள் பார்த்த 2வது கிரிக்கெட் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில், நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை விட இந்த போட்டி11% அதிகமான ரேட்டிங் பெற்றுள்ளது.
இந்தியாவின் நேரடி விளையாட்டு ஒளிபரப்புகளின் தரத்தை உயர்த்தி, புதிய சாதனைகளை உருவாக்கி ஜியோஸ்டார், ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025-இல் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மூலம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-ன் கிரேட்டஸ்ட் ரெய்வல்ரி ("Greatest Rivalry") பிராண்டிங் மூலம் மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 23 அன்று துபாய் மைதானத்தில் நடந்த இந்த போட்டி, 20.6 கோடி ரசிகர்கள் கண்டுகளித்த நிலையில், இதன் மூலம் பிராட்கேஸ்டிங் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்(BARC) வரலாற்றில்அதிக ரசிகர்கள் பார்த்த 2-வது போட்டி இதுவாகும்.
மேலும், விராட் கோஹ்லி மிக வேகமாக 14,000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்த சாதனையை பதிவு செய்த இந்த ஆட்டம், 2609 கோடி நிமிடங்களுக்கான பார்வை நேரத்தை பெற்றது.
ஜியோஸ்டார் – ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள கருத்தின்படி, இந்தியாவின் விளையாட்டு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கும் முயற்சியில், ஜியோஸ்டார் புதிய உயரங்களை தொட்டுள்ளது. அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய தளம் மற்றும் திறமையான சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்த அதிரடியான கிரேட்டஸ்ட் ரெய்வல்ரி (Greatest Rivalry)-யை பரவலாக்கியுள்ளது. எதிர்காலத்திலும் புதிய ரசிகர்களை ஈர்த்து, கிரிக்கெட்டின் ரசிகர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்த, தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் சிறப்புமிக்க தருணங்கள்:
சாம்பியன் டிராபி தொடரில் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது,, ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஆச்சரிய தருணம் கிடைத்தது. முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி டியோல், நேரடியாக மேடையில் போட்டியை ரசித்தனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொது மக்களிடையிலும் மிகப்பெரிய கவனத்தை பெற்றது.
போட்டிக்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள்:
தேங்கயூ பாகிஸ்தான் ஜிடிகா ஹிந்துஸ்தான் ("Thank You Pakistan...Jeetega Hindustan" )என்ற பெயரில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, யுவராஜ் சிங், ஷாஹித் அப்ரிடி, இஞ்சமாம்-உல்-ஹக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பாலோ தி ப்ளூஸ் ("Follow the Blues") என்ற பெயரில், இந்திய அணியின் போட்டிக்கு முன்பான தயாரிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிகழ்ச்சி. தில்சே இந்தியா ("Dil Se India") கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் தயாரிப்புகளை பகிர்ந்த நிகழ்ச்சி. ஒகஸ்மித் கிரிக்கெட் லைவ் ("Oaksmith Cricket Live") என்ற பெயரில், போட்டிக்கு முன், மிட்-மாட்ச் மற்றும் பிந்திய அலசல் நிகழ்ச்சி, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 2.2 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது.
2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்க, இந்தியா, தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியல் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்திய நிலையில், இறுதிப்போட்டியிலும் வெற்றிவாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த போட்டி, இந்திய அணிக்கு, 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதற்குப் பிறகு, இன்னொரு சர்வதேச கோப்பையை வெல்லும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த முக்கிய இறுதி போட்டியின் ஒளிபரப்பு, ஜியோஸ்டார் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில், காலை 8:00 மணி முதல் தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கையில் டூர்தர்சன் (DD) தொலைக்காட்சி பார்வையாளர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது,