பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தயாசத்தில் வீ்ழ்த்திய நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய நிலையில், அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
Read In English: Champions Trophy: Pakistan, Bangladesh eliminated as New Zealand come out on top in crucial NZ vs BAN encounter
8 நாடுகள் பங்கேற்றுள்ள சாம்பியன் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த போட்டியில், ஏ பிரிவில், ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்க, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் பி பிரிவில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 2-வது போட்டியில் இன்று வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன், அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. அதேபோல், முதல் போட்டியில்வங்கதேச அணியை வீழ்த்திய இந்தியா, நேற்று (பிப் 23) பாகிஸ்தான் அணியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள், தொடரில் இருந்து வெளியேறியது. குறிப்பாக போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் அணி சாம்பியன் லீக் தொடரில் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது,
இதனிடையே வரும் பிப்ரவரி 27-ந் தேதி பாகிஸ்தான் வங்கதேச அணிகள் தங்கள் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டின் போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், இரு அணிகளுமே ஆறுதல் வெற்றிக்காக போராடும். அதேபோல் மார்ச் 2-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் தங்கள் கடைசி போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.
நேற்றைய (பிப்ரவரி 23) போட்டியில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் ஏற்கனவே தங்கள் போட்டி நன்றாக முடிந்துவிட்டது, சாம்பியன் லீக் தொடரின் எங்களது பிரச்சாரம் முடிந்துவிட்டது என்று சொல்லலாம். மற்ற போட்டிகளின் முடிவுகளை நாஙகள் நம்பியிருக்க வேண்டும். இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளதால் நம்பிக்கை உள்ளது. ஒரு கேப்டனாக, இந்த சூழ்நிலை எனக்குப் பிடிக்கவில்லை. "எங்கள் விதி எங்கள் கையில்தான் இருக்க வேண்டும்," என்று ரிஸ்வான் கூறியிருந்தார்.
இன்றைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோல்வியை சந்தித்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இன்றைய போட்டியில், வங்கதேசம் தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் அணியும் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதேபோல் ஏ பிரிவில், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியும், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு தோல்வியும் சந்தித்துள்ளன.