worldcup 2023 | india-vs-australia | chandigarh: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How to enjoy India vs Australia World Cup final in Chandigarh? Head to Sector 17
இந்தப் போட்டிக்காக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்திற்கு உள்ளே இருந்து அவர்களது ஆதரவை வழங்க இருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய அணிக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க, சண்டிகரில் உள்ள 17வது செக்டாரைச் சேர்ந்த கடைக்காரர்கள் அனைவரும் இணைந்து செண்டர் பிளாசாவில் பெரிய திரையை அமைத்துள்ளனர். இதற்காக சுமார் 90,000 ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக சண்டிகர் 17 வது செக்டார் பிசினஸ் கவுன்சில் தலைவர் நீரஜ் பாக்கா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “கிரிக்கெட் ரசிகராக இல்லாதவர் கூட போட்டியைப் பார்க்க விரும்பும் நேரம் இது. ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி. நமது அணி அங்கு விளையாடி உள்ளது. நாங்கள் நமது நாட்டிற்காக அணியை உற்சாகப்படுத்த விரும்புகிறோம். அதற்கு செண்டர் பிளாசாவை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும். போட்டியைக் காண வருபவர்களுக்கு சூடான காபி போன்ற வரவேற்பு பானம் வழங்கப்படும்" என்று கூறினார்.
கடைகள் உள்ள பிளாசா பகுதியை விளக்குகளால் அலங்கரிக்க சண்டிகர் வணிக கவுன்சில் சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். 150-அடி சீரியல் ஒளி அமைப்பு ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாக உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 200 கடைக்காரர்கள் உள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பிளாசாவை ஒளிரச் செய்வதில் பங்களித்துள்ளனர். முன்னதாக, இந்த தீபாவளிக்கு சண்டிகரில் 17வது செக்டார் தான் ஷோஸ்டாப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Chandigarh Sector 17 Decoration 🕯️ Happy Diwali 🪔
— Rahul verma (@Rahulvok) November 10, 2023
Decoration lights 🪔#HappyDiwali #decorationlight#Diwali2023 #DiwaliCelebration #diwalivibes pic.twitter.com/lomq4mUwoE
Sector 17 , Chandigarh ♥️ pic.twitter.com/XqLPgjfGuG
— you don't deserve it but still i (@sleepingpanda0) November 9, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.