ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை; போட்டிகளை நடத்தும் நகரங்களாக சென்னை, மதுரை தேர்வு

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளை சென்னை, மதுரை நடத்த முடிவு; தமிழ்நாட்டில் ஹாக்கியின் பெருமைமிக்க நாட்களை மீண்டும் கொண்டு வர விரும்புவதாக ஹாக்கி இந்தியா கருத்து

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளை சென்னை, மதுரை நடத்த முடிவு; தமிழ்நாட்டில் ஹாக்கியின் பெருமைமிக்க நாட்களை மீண்டும் கொண்டு வர விரும்புவதாக ஹாக்கி இந்தியா கருத்து

author-image
WebDesk
New Update
hockey udhay

சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஹாக்கி இந்தியா அதிகாரிகள். (புகைப்படம்: ஹாக்கி இந்தியா)

இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் எஃப்.ஐ.ஹெச் (FIH) ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்களாக சென்னை மற்றும் மதுரையை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த ஆண்டு FIH ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில், 24 அணிகள் முதன்முறையாக பங்கேற்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். FIH ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் மூன்றாவது தொடர் இதுவாகும், இதற்கு முந்தைய FIH ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2021 இல் ஒடிசாவின் புவனேஸ்வரிலும், 2016 இல் உத்தரபிரதேசத்தின் லக்னோவிலும் நடைபெற்றது, இதில் இந்தியா வெற்றி பெற்றது.

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

"வரவிருக்கும் FIH ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது ஹாக்கி இந்தியாவுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு இணையற்ற ஆதரவை வழங்கிய தமிழக அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

"இந்த முறை ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் 24 அணிகள் விளையாடுவதால், சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்களில் இந்த நிகழ்வை நடத்துவோம். 2023 ஆம் ஆண்டு சென்னை ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை நடத்திய நிலையில், மதுரை முதல் முறையாக இந்த அளவிலான சர்வதேச போட்டியை நடத்தவுள்ளது. ஹாக்கியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று ஹாக்கி இந்தியாவின் தலைவராக தற்போது தலைமை தாங்கும் முன்னாள் இந்திய வீரர் திலீப் டிர்கி கூறினார்.

Advertisment
Advertisements

ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் போலா நாத் சிங், "இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு ஹாக்கியை எடுத்துச் சென்று விளையாட்டை மேம்படுத்துவதே எங்கள் முயற்சி. இந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் நாங்கள் சென்னை மற்றும் மதுரையை மைதானங்களாகத் தேர்ந்தெடுத்தோம்," என்றார்.

"ஹாக்கி மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் வழங்கியதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஹாக்கியின் பெருமைமிக்க நாட்களை மீண்டும் கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம், மேலும் சென்னை நீண்ட காலமாக சர்வதேச ஹாக்கி நிகழ்வுகளுக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலகளாவிய ஹாக்கி ரசிகர்களை எங்கள் சிறந்த மாநிலத்திற்கு வரவேற்பதற்கும் எங்கள் விருந்தோம்பலை அனுபவிப்பதற்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று ஹாக்கி இந்தியா பொருளாளரும் ஹாக்கி தமிழ்நாடு தலைவருமான சேகர் மனோகரன் கூறினார்.

Madurai Chennai Hockey

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: