சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் கார் பந்தயங்கள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளன. இந்தப் பந்தயங்கள் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்பட இருந்தது.
இந்தப் பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும்.
இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டை மிக்ஜாம் புயல தாக்கியது.
இதையடுத்து தற்போது பந்தய தேதிகள் டிச16 மற்றும் 17ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்காத அரசு இதற்கு நிதி ஒதுக்குவது சரியா? எனக் கேள்வியெழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“