New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/11/i4vi1oeR6wy4cB6BCtEi.jpg)
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டியில் அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டியில் அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது சீசன் போட்டிகள் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாஸ்டர்ஸ் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரணவுக்கு பரிசுத் தொகையை தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
Our Dravidian Model Government, under the able leadership of our Hon'ble Chief Minister @mkstalin, has successfully hosted the @Chennai_GM 2024, India’s strongest classical Chess tournament.
— Udhay (@Udhaystalin) November 11, 2024
I had the privilege of presenting the first prize of Rs. 15 lakh to Tamil Nadu's… pic.twitter.com/0To2ibTn97
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.