Advertisment

சென்னையில் ஜூனியர் பேட்மிட்டன் லீக்: தயாரான கோவை சூப்பர் கிங்ஸ்

ஜூனியர் பேட்மிட்டன் லீக் போட்டியில் கோவை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாது முறையாக பங்கேற்கிறது.

author-image
WebDesk
New Update
Chennai Junior Badminton League; Kovai Super Kings team gear up tamil news

Junior Badminton League (JBL) Kovai Super Kings team

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் பேட்மிட்டன் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கோவை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாநகர துணை ஆணையாளர் மதிவாணன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜுனியர் பேட்மிட்டன் லீக்(JBL) தமிழ்நாடு அளவில் பேட்மிட்டன் போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த முறை கோவையில் இப்போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு சென்னையில் வருகின்ற 26-29 வரை நடைபெறுகிறது. இதில் இரண்டாவது முறையாக கோவை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனை மாநகர துணை ஆணையாளர் மதிவாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி பந்தய சாலை பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துவங்கப்பட்ட இந்த பேரணி ஆனது கோவையில் 100 கிலோ மீட்டர் சுற்றி வந்து மீண்டும் கல்லூரி மைதானத்தில் முடிவடைகிறது.

publive-image

இந்தியா பேட்மிட்டன் பயிற்சியாளர் மாறன்

இந்தப் பேரணி நிகழ்ச்சியில், இந்தியா பேட்மிட்டன் பயிற்சியாளர் மாறன், கோவை சூப்பர் கிங்ஸ் பேட்மிட்டன் அணியின் தலைவர் ஆயிஷா அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய பேட்மிட்டன் பயிற்சியாளர் மாறன் மற்றும்

கோவை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ஆயிஷா அக்பர்

publive-image

கோவை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ஆயிஷா அக்பர்

எனது வாழ்வில் பேட்மிட்டன் போட்டிக்காக விழிப்புணர்வு பேரணி நடத்துவது இதுவே முதல்முறை. மேலும் ஜுனியர் பேட்மிட்டன் போட்டிகளால் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பேட்மிட்டன் போட்டிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என தெரிவித்தனர்.

மேலும் கடந்த முறையை விட இந்த முறையும் கலந்து கொள்ளும் அணிகளின் பயிற்சிகள் வலுவாக இருப்பதாகவும், குறிப்பாக ஜனவரி 26"முதல் 29"வரை சென்னை உள் விளையாட்டு அரங்கில் மொத்தம் 8"அணிகள் பங்கேற்று 12"லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் செட்டிநாடு சேம்ப்ஸ் அணி சாம்பியன் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று மாலை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலில் இந்த அணி குறித்தான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Sports Coimbatore Badminton
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment