அல்டிமேட் கோ கோ: மும்பையை சாய்த்த சென்னை… அரை இறுதிக்கு முன்னேறி அசத்தல்!
Chennai Quick Guns became the third side to secure a playoff berth in Ultimate Kho Kho 2022 Tamil News: அல்டிமேட் கோ கோ லீக் தொடரில், மும்பை கில்லாடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 - 42 என்ற கணக்கில் வெற்றியை சுவைத்த சென்னை குயிக் கன்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Ultimate Kho Kho - Chennai Quick Guns Tamil News: ஐபிஎல், ப்ரோ கபடி லீக் வரிசையில் அல்டிமேட் கோ கோ லீக் தொடர் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இத்தொடரின் முதல் சீசன் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், தற்போது தொடருக்கான பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி எலிமினேட்டருடன் பிளேஆஃப் போட்டிகள் தொடங்கும். எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 1 செப்டம்பர் 2 ஆம் தேதி விளையாடப்படும். அதே நேரத்தில் குவாலிஃபையர் 2 செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 4 ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், புனேவில் நடைபெற்று வரும் அல்டிமேட் கோ கோ லீக் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் அணி, மும்பை கில்லாடிஸை எதிகொண்டது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் சென்னை அணி 58-42 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை குயிக் கன்ஸ் அணி தற்போது அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை அணிக்கு தங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்த ராம்ஜி காஷ்யப் 11 புள்ளிகளும், நரசய்யா 14 புள்ளிகளும் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர். 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்றுள்ளது.