Chennai Super Kings becomes most popular sports team in Asia Tamil News: ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) தொடருக்கான எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஆசியாவில் மிகவும் பிரபலமான அணி என டிபோர்ட்ஸ் மற்றும் ஃபைனான்சாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதாவது, கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல்-நாஸ்ர் எஃப்சி அணியை விட சென்னை அணிக்கு தான் பாப்புலர் அதிகம் என்று கூறியுள்ளது.
மார்ச், 2023ல் ட்விட்டர் தொடர்புகளின் அடிப்படையில் அணிகளை இந்த அறிக்கை வரிசைப்படுத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 512 மில்லியன் தொடர்புகளுடன் முதலிடத்தில் இருந்தது. அல்-நாஸ்ர் எஃப்சி அணி 500 மில்லியன் தொடர்புகளுக்குப் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரரான எம்எஸ் தோனி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு உரிமையாளரின் தலைமையில் தோனி உள்ளார். ஐபிஎல் 2023ல் சிஎஸ்கே அல்-நாசரை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பது இந்தியாவை ஒரு புயலைப் போல ஆக்கிரமித்துள்ளது.

மார்ச் மாதம் மற்றும் ஐபிஎல் இரண்டும் பல வருடங்களாக ஒன்றோடொன்று ஒத்ததாக இருந்து வருகிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் இரண்டு மாத கிரிக்கெட் திருவிழாவாக அரங்கேறி வருகிறது. இதில் இந்தியாவின் மற்றும் உலகின் சிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் உலகின் மிகவும் மதிப்புமிக்க டி20 கோப்பைக்காக ஆடுகளத்தில் போராடி வருகிறார்கள்.
சென்னை அணியைத் தவிர, மற்ற இரண்டு ஐபிஎல் உரிமையாளர்களும் ட்விட்டரில் தொடர்புகளின் அடிப்படையில் முதல் 5 பட்டியலில் ஒரு பகுதியாக உள்ளனர். 3 வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 345 மில்லியன் தொடர்புகளுடன் உள்ளது. அந்த அணியின் முகமாக எப்போதும் முன்னாள் இந்திய கேப்டனும் சூப்பர் ஸ்டாருமான விராட் கோலியாகவே இருந்து வருகிறார். அவர் 2021ல் பதவி விலகிய பிறகு இந்த ஆண்டு சில போட்டிகளில் கேப்டனாக திரும்பினார்.
274 மில்லியன் தொடர்புகளுடன் பட்டியலில் 4வது இடம் அம்பானிக்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 5 பட்டங்களை வென்ற அணியாகும். இந்திய தேசிய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், மும்பைக்கு பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் பணக்கார கிரிக்கெட் வரலாறு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil