கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை அணியின் நிரந்தர கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, இன்று தொடங்கவுள்ள 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்
தோனியின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஐபிஎல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய கேப்டனாக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் சென்னை அணியில் கடந்த பல சீசன்களில் விளையாடிய வீரர்களே பெரும்பாலும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதால், சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கேப்டனாவே களமிறங்கிய தோனி தற்போது ஒரு சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குவது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Passing the rein! 🧊➡️🔥
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2022
Watch the full 📹 👉 https://t.co/vS9BSJ01er#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni @imjadeja pic.twitter.com/HwcyHSSaUS
கடந்த சீசன்களில் சென்னை அணி
தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள சில அணிகள், தங்களது அணியில், வீரர்கள் காயம், பார்ம் அவுட் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்தாலும் இந்த முறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதி கொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில அணிகள் நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், மற்ற அணிகளுக்கு சவால் விடும் வகையில் தயாராகி வருகினறனர்.
ஆனால் டி20 தொடர்களில் எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், எதையும் தீர்க்கமான தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும். இதுவரை ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுன்ன சென்னை அணி, இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொ்டரை தவிர மற்ற அனைத்து தொடர்களிலும் ப்ளேஅப் சுற்றை உறுதி செய்யுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் மீதான் எதிர்பார்ப்பு சீசனுக்கு சீசன் அதிகரித்து வருகிறது. இந்த அனைத்து தொடர்களிலும் சென்னை அணியை வழி நடத்திய கேப்டன் தோனி, அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாமல் வழக்கமான வீரர்களையே பயன்படுத்தி வந்தார். மேலும் போட்டியில் முக்கிய தருணத்தில், ஆலோசனை வழங்குவது, வெற்றிக்காக இறுதி வரை போராடுவது மற்றும் இக்கட்டான சூழ்நிலையில், அணியை சிறப்பாக வழிநடத்துவது என கேப்டன்சியில் தோனி முத்திரை பதித்துள்ளார்.
இவரது கேப்டன்சியில் சென்னை அணி 60 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஐபிஎல் தொடரில் வேறு எந்த கேப்டனும் எந்த அணியும் செய்யாத சாதனையாகும்
One sleep away! All set! 💪#Yellove #WhistlePodu 🦁💛 pic.twitter.com/nVyY3gUZCe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2022
சென்னை அணி தற்போது…
தற்போது சென்னை அணியில் கேப்டன் மாறியிருக்கலாம், ஆனால் அவர்களின் நெறிமுறைகளும் அணுகுமுறையும் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சென்னை அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்களே பெரும்பாலும் இந்த சீசனில் விளையாட உள்ளதால். வழக்கமான அணுகுமுறை ஆக்ரோஷம் வீரர்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் ஐபிஎல் தொடரின் ஏலத்தில், மீண்டும் மீண்டும் புத்திசாலித்தனமாகவும் எளிமையாகவும் இருந்தபோதிலும், சென்னை அணி பெரும்பாலான துறைகளில் வலிமைய சேர்த்துள்ளது.
அதேபோல் தங்கள் முக்கிய வீரர்களின் பட்டியலில் சமரசம் செய்யவில்லை. இலங்கையை சேர்ந்த மகேஷ் தீக்ஷனாவின் ஒரு கூடுதல் சுழற்பந்து வீச்சாளர், மற்றும் ஆடம் மில்னே வேகப்பந்து வீச்சை மேம்படுத்தவும் உள்ளனர். மில்னே மற்றும் கிறிஸ் ஜோர்டான் அவர் இல்லாத உணர்வை உணராத போதும் தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம் சென்னை அணிக்கு சற்று பின்னடைவாகும். நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கலாம்.
Yellove above the meter for the trio!
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2022
OTP: 7847 💛#WhistlePodu @snj_group pic.twitter.com/GfsE33ttvm
சிஎஸ்கே அடுத்தது என்ன?
ஜடேஜா தனது கேப்டனாக எப்படி நடந்துகொள்வார் என்பதில் பல நுண்ணிய கவனம் இருக்கும். தொலைநோக்கு, பகுப்பாய்வு மற்றும் நடைமுறை மனம், விளையாட்டைப் பற்றிய ஆழமான புரிதல், அவரது நிலையில் சிந்திக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைக் கொண்டு வரும் திறன் என தோனியை போலவே அவரது துருப்புச்சீட்டான ஜடேஜா சிறப்பாக செயல்பாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜடேஜாவின் வாழ்க்கையில் மற்றொரு கட்டத்தின் தொடக்கமாக இருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “