MS Dhoni | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் வீசிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர அரைசதம் அடித்த ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், கடைசி கட்டத்தில் களமிறங்கிய அதிரடி காட்டிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இதனையடுத்து, 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி, 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் கே.எல் ராகுல் 82 ரன்களும், குயின்டன் டி காக் 54 ரன்களும் எடுத்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Chennai Super Kings head coach Stephen Fleming reasons why MS Dhoni won’t bat higher: ‘He is sort of recovering from that…’
ஃப்ளெமிங் பதில்
இந்நிலையில், இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், எம்.எஸ் தோனி ஏன் டாப் ஆடரில் பேட் செய்ய மாட்டார் என்பதற்கு காரணம் குறித்து கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "எங்களைப் போலவே எல்லோரும் அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறார்கள். தொடர் முழுதும் அவர் அணிக்கு தேவைப்படுகிறார். 2-3 ஓவர்களில் அவரது கேமியோ ரோலில் அவர் அந்த இடத்தைச் சொந்தமாக வைத்திருக்கிறார்.
கடந்த வருடங்களில் அவருக்கு முழங்காலில் பிரச்சனைகள் இருந்துள்ளன. மேலும் அவர் அதிலிருந்து மீண்டு வருகிறார், அதனால்தான் குறிப்பிட்ட அளவு பந்துகள் மட்டுமே அவர் சிறப்பாக செயல்பட முடியும்." என்று அவர் கூறினார்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான கடைசி ஓவரில் தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் அசுரத்தனமாக அவர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இறுதியில் சி.எஸ்.கே அணி அவர் எடுத்துக்கொடுத்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது.
"இது தூண்டுதலாக இருக்கிறது, இல்லையா? இந்த ஆண்டு பயிற்சியிலும் அவரது பேட்டிங் மிகவும் குறைவாக இருந்தது. அவர் என்ன செய்கிறார் என்பதில் அணியினர் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் சீசனுக்கு முந்தைய காலத்தில் அவரது திறன் அளவு மிக அதிகமாக இருந்தது. அவர் எங்களை மேலே தள்ளக்கூடிய ஒரு நல்ல நிலைக்கு எங்களை அழைத்துச் செல்வது மற்ற பேட்டிங் யூனிட்டின் பொறுப்பாகும். ஒவ்வொரு முறையும் அவர் அதைச் செய்கிறார், இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது." என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.