/indian-express-tamil/media/media_files/vphWCIqukBSsGGVzV1QA.jpg)
சென்னை – ராஜஸ்தான் அணி போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே இருங்கள்; ரசிகர்களுக்கு சி.எஸ்.கே அணி நிர்வாகம் வேண்டுகோள்
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி முடிவடைந்ததும் ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 61 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை அணி ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது சென்னை – ராஜஸ்தான் போட்டி முடிவடைந்ததும் ரசிகர்கள் மைதானத்திலே இருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில், சூப்பர் ரசிகர்களை ஆட்டத்திற்கு பிறகு மைதானத்தில் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளது. இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
🚨🦁 Requesting the Superfans to Stay back after the game! 🦁🚨
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2024
Something special coming your way! 🙌🥳#CSKvRR#YellorukkumThanks 🦁💛 pic.twitter.com/an16toRGvp
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.