IPL 2024 auction Chennai Super Kings | Rachin Ravindra: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை துபாயில் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது.
ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 116 வீரர்கள் மட்டும் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள்.
இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது.
Young Lion from the Kiwi Land! 🦁🥳 pic.twitter.com/wvEiZqaOCX
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
இடதுகை பேட்ஸ்மேனான இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர் இந்திய வம்சாவளி ஆவார்கள். இந்திய மண்ணில் நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 3 சதம் 2 அரைசதங்களுடன் 578 ரன்களை குவித்து மிக இளம் வயதில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்து அசத்தினார். பகுதி நேர பந்துவீச்சாளராகவும் அவர் பந்துகளை வீசியிருந்தார்.
First Time in #Yellove !🦁💛 pic.twitter.com/2JXLlvWrNO
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி நிச்சயம் வாங்கும் என ஏற்கனவே ரசிகர்கள் கணித்து வந்த நிலையில், அவர்கள் நினைத்தது போலவே அவரை சி.எஸ்.கே வசப்படுத்தியது. இருப்பினும், அவரது பூர்விகம் பெங்களூரு என்பதால் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கும் என சில ரசிகர்கள் தெரிவித்து வந்தார்கள். ஆனால், பெங்களூர் அணி அவரை ஏலத்தில் கேட்க முன்வரக்கூட இல்லை.
மாறாக, அவரை வசப்படுத்த டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சி.எஸ்.கே அணிகள் சிறிய போட்டியில் ஈடுபட்டன. ஒரு கட்டத்தில் டெல்லி அணி விட்டுக் கொடுக்கவே, ரவீந்திராவின் அடிப்படை விலையான 50 லட்சத்தில் இருந்து 1.80 கோடியுடன் அவரை சென்னை அணி வாங்கியது. இதேபோல், மற்றொரு நியூசிலாந்து அதிரடி வீரர் டேரில் மிட்செல்லையும் சிஎஸ்கே அணி 14 கோடிக்கு வாங்கியது.
Mitchell in Manjal! 🦁💛 pic.twitter.com/UmAISnQDa1
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.