scorecardresearch

பிளேயிங் 11-ஐ மாற்றுமா சி.எஸ்.கே? மொயின் அலி, தீக்ஷனாவுக்கு பதிலாக ஸ்டோக்ஸ், சான்ட்னர் ரெடி

இந்த சீசனின் தொடக்க ஆட்டங்களில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை காயம் காரணமாக தவற விட்டாலும், வெற்றியுடன் தொடங்க முடிந்தது.

Chennai Super Kings stare at playing 11 selection headache Tamil News
Chennai Super Kings captain Mahendra Singh Dhoni with teammate Ben Stokes. (PTI)

Chennai Super Kings playing 11 selection headache Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்கு முன்னேற டெல்லி அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி ருசிக்க வேண்டும்.

டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் 67வது லீக் போட்டி வருகிற சனிக்கிழமை (மே.20) மாலை 3:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

ஆடும் லெவனை மாற்றுமா சி.எஸ்.கே?

சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அவர்களின் கணிதம் மற்றும் டெம்ப்ளேட் பல ஆண்டுகளாக எளிமையானவையாக இருந்துள்ளது. அதாவது, சொந்த மைதானத்தில் நடக்கும் 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற வேண்டும். வெளியில் நடக்கும் போட்டிகளில் 7ல் 3ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அது அவர்களை முதல் இரண்டு இடங்களுக்கு அழைத்துச் செல்லும். ஆனால், நடப்பு சீசனில் சென்னையின் கணக்கு தலைகீழாக மாறிப்போனது. சொந்த மைதானத்தில் 4ல் வெற்றி 3ல் தோல்வியை பெற்றது. வெளியில் நடந்துள்ள 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று விட்டது. இன்னும் ஒரு போட்டி (டெல்லிக்கு எதிராக) மீதம் இருக்கிறது.

இந்த சீசனின் தொடக்க ஆட்டங்களில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை காயம் காரணமாக தவற விட்டாலும், வெற்றியுடன் தொடங்க முடிந்தது. தொடரின் நடுவில் சில போட்டிகளில் சரிவைக் கண்டாலும், இளம் வீரர்களின் துணையுடன் மீண்டது. தொடக்க வீரர் டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியால் அணிக்கு சிறப்பான தொடக்கம் முடிந்தது. அவர்களது பார்ட்னர்ஷிப் சென்னைக்கு உத்வேகம் கொடுத்தது. அவர்களின் ஜோடி உடைக்கப்படும் போது கான்வே களத்தில் இருந்து மட்டையை சுழற்றி வருவது எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட உதவியுள்ளது.

IPL 2023

சுவாரசியமாக, மொயீன் அலிக்கு பதிலாக மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களமாடிய அஜிங்க்யா ரஹானேவின் ஆட்டம் யாரும் எதிர்ப்பாரா ஒன்றாக இருந்தது. அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தது. சென்னை சேப்பாக்கத்தில் மொயீன் அலியின் சிறப்பான ஆஃப் ஸ்பின் ஸ்டோக்ஸின் தேவையை குறைத்தது. மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்களின் விக்கெட்டுகளை எதிரணிகள் கைப்பற்ற போதுமானதாக உள்ளது.

மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா சேப்பாக்கத்தில் அவர் எதிர்பார்த்த தாக்கத்தை உருவாக்க முடியவில்லை – 6 போட்டிகளில் 8.14 என்ற எகானமி விகிதத்தில் 1 விக்கெட் என்று எடுத்தார். இது சான்ட்னரைக் கொண்டுவருவதற்கான கதவைத் திறக்கிறது. அவர் திறம்பட பேட்டிங் செய்யக்கூடியவர். ஸ்டோக்ஸைப் பொறுத்தமட்டில் சென்னையைத் தடுத்து நிறுத்தும் ஒரே பிரச்சினை என்னவென்றால், அவர் பந்துவீசுவதற்குக் கிடைக்காமல் போகலாம். ஆடுகளங்கள் மேலும் மெதுவாக இருந்தால், மொயீன் அலியின் ஆஃப் ஸ்பின் தேவைப்படும்.

மொயீன் அலி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், பேட்டிங்கில் பெரிய அளவில் ஸ்கோர் சேர்க்கவில்லை. மேலும், சென்னை அணி ரன் சேர்க்க தடுமாறிய ஆட்டங்களில் அவர் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரது இடத்தில் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட முடியும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஏப்ரல் 3 போட்டிக்குப் பிறகு அவர் விளையாடவில்லை என்றாலும், ஸ்டோக்ஸ் வலைப்பயிற்சியில் சிறப்பாக இருந்தார்.

இதேபோல், சென்னை அணி சான்ட்னரை மீண்டும் கொண்டு வருவது குறித்து யோசிக்கும். வெளிநாட்டு இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், ஆடும் லெவன் அணியில் இடம்பிடிப்பதற்காக மற்றொரு வெளிநாட்டு வீரருடன் மட்டுமல்ல, ஜடேஜாவுடனும் போராடுவதில் திணறி வருகிறார். ஆனால் சான்ட்னர் மற்றும் ஜடேஜா இருவரும் ஸ்பெக்ட்ரமின் எதிரெதிர் முனைகளில் உள்ளனர். அவர் தனது வேகத்தை வேறுபடுத்துவதில் நன்கு அறிந்தவர். மேலும் இந்த வேகத்துடன் விரைந்த பிந்தையவருக்கு எதிராக பந்துக்கு அதிக காற்றைக் கொடுக்க முனைகிறார். தீக்ஷனாவைப் போலல்லாமல், சான்ட்னரும் களத்தில் சிறப்பாக பந்துகளை சுழற்றுவார்.

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை, மதீஷா பத்திராவின் பந்துவீச்சு அணியின் பந்துவீச்சு வரிசைக்கு வலு சேர்த்து வருகிறது. துஷார் தேஷ்பாண்டே மற்றும் தீபக் சாஹருடன் இணைந்து அவரும் மிரட்டி வருகிறார். இவர்களின் கூட்டணி எதிர்வரும் ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். சென்னை அணி நிர்வாகம் பொதுவாக ஆடும் லெவனை அடிக்கடி மாற்றுவதில்லை. களமாடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை கொடுக்கும். சென்னை அணியில் முந்தைய சீசன்களில் விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூட பெருமையாக குறிப்பிட்டு இருந்தார். அதனால், ‘தல’ தோனி முடிவே ஆடும் லெவனை தீர்மானிக்கும். அவரது தலைமையிலான அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Chennai super kings stare at playing 11 selection headache tamil news

Best of Express