மும்பை புறப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றது

இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் தாகத்தை தணிக்க சென்னை அணி தயாராகியுள்ளது. வரும் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் கலந்து கொள்ள, சென்னை அணி இன்று மும்பை புறப்பட்டுச் சென்றது.

11வது ஐபிஎல் தொடர், கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. இன்னும் நான்கே தினத்தில், ஆட்டம் ஆரம்பம். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், மும்பையும், சென்னையும் மோதுகின்றன. ஐபிஎல்-ல் மிக சவாலான இரு அணிகள் மோதும் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த சென்னை அணி, தனது பிளஸ், மைன்ஸ் உள்ளிட்ட விஷயங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மும்பை அணியை வீழ்த்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதையும் சிஎஸ்கே உணர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றது. பத்மபூஷண் விருது பெற டெல்லி சென்றிருந்த தோனி, அங்கிருந்து மும்பைக்கு வந்து அணியுடன் சேர உள்ளார்.

×Close
×Close