நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் 2018 ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆப் சுற்று, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(22.5.18) இரவு நடைப்பெற்றது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிராத்வெய்ட் 43 ரன்கள் எடுத்திருந்தார். 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியின் ஆட்டம் முதலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்பு, டு பிளசிஸ் ஓரளவு நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று அரை சதமடித்தார். . இறுதியில் 19.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து சென்னை அணி த்ரீல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்ற ஐபிஎல் லீக் தொடரில் சென்னை அனி 7 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனத்தொடர்ந்து, 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இன்று(23.5.18) மோதவுள்ளன.