எழு வருடங்களுக்கு முன்பு இதே நாள் (ஏப்ரல் 2), மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தல தோனி சிக்ஸ் அடிக்க, இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா. ஐபிஎல் நெருங்கி வரும் வேளையில், சிஎஸ்கே ட்விட்டரில் பக்கத்தில் தோனி அடித்த அந்த மாஸ் சிக்ஸ் படம் பதிவிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
தோனியின் அதி தீவிர ரசிகரான நம்ம சரவணன் ஹரி, சேப்பாக்கத்தில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கெதிரான போட்டிக்கான டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக அப்பாயின்ட் செய்யப்பட்டுள்ள, தோனியின் சீனியர் நண்பர் ராஜீவ் குமார் தோனி பற்றி கூறுகையில், "எனக்கு தோனியை நீண்ட காலமாக தெரியும். அவரைப் போன்ற அதை அமைதியான தன்மையை என்னால் சிஎஸ்கே அணியிலும் உணர முடிகிறது. இதனால், வேலை செய்வதற்கு மிகச் சிறந்த இடமாக சிஎஸ்கே உள்ளது" என்றார்.
நம்ம 'சின்ன தல' சுரேஷ் ரெய்னா, ஜிம்மில் வொர்க் செய்த போது, தன்னை படம் பிடித்து, அதனை பகிர்ந்துள்ளார். இதுவும், சிஎஸ்கே ரசிகர்களால் வைரல் ஹிட்.
நம்ம சென்னை சூப்பர் கிங்ஸின் டு பிளசிஸ், அதாங்க.. தென்னாப்பிரிக்க கேப்டன். ஆங்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில், இரண்டாம் இன்னிங்ஸில் சதம் (120) விளாசி, ஆஸி., அணி வெற்றிப் பெற 500க்கும் மேல் இலக்கு கொண்டு போய்விட்டார். 'நம்ம சிஎஸ்கே பையன் டா-னு' ரசிகர்கள் இதையும் ஹிட் ஆக்கி விட்ருக்காங்க!.
அதுமட்டுமின்றி, நேற்று சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் அதை கண்டு களித்திருக்கின்றனர். இதனால், ஆச்சர்யப்பட்டு போன சாம் பில்லிங்ஸ், 'என்ன ஒரு ரசிகர்கள், என்ன ஒரு அணி' என்று ஆச்சர்யப்பட்டு அளித்த பேட்டியும் செம ரகம்!.