scorecardresearch

CSK vs KKR Highlights: ராணா – ரின்கு அதிரடி ஆட்டம்; கொல்கத்தாவுக்கு அசத்தல் வெற்றி

சென்னையை வீழ்த்திய கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023 Live Score | CSK vs KKR Live Score | Chennai vs Kolkata Live Score
ஐபிஎல் 2023, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லைவ் ஸ்கோர்

Chennai Super Kings vs Kolkata Knight Riders Live Score Updates in tamil: இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai   05 June 2023

Chennai Super Kings 144/6 (20.0)

vs

Kolkata Knight Riders   147/4 (18.3)

Match Ended ( Day – Match 61 ) Kolkata Knight Riders beat Chennai Super Kings by 6 wickets

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி பந்துவீச்சில் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்த நிலையில், சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்க்க திணறியது. மேலும், பேட்டிங்கில் படு சொதப்பல் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் கொல்கத்தா அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 145 ரன்கள் கொண்ட கொல்கத்தா அணி பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி விக்கெட் சரிவை மீட்டெடுத்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை சென்னையின் பந்துவீச்சாளர்கள் உடைக்க போராடினார்கள். இந்த ஜோடியில் அரைசதம் அடித்த ரின்கு சிங் 54 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கடைசிவரை களத்தில் இருந்த கேப்டன் நிதிஷ் ராணா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 18.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால், சென்னையை வீழ்த்திய கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 15 புள்ளிகளுடன் சென்னை அதே 2வது இடத்தில் நீடிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
22:43 (IST) 14 May 2023
14 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

14 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 40 ரன்கள் தேவை.

22:40 (IST) 14 May 2023
13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 49 ரன்கள் தேவை.

22:37 (IST) 14 May 2023
12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 61 ரன்கள் தேவை.

22:33 (IST) 14 May 2023
11 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

11 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 70 ரன்கள் தேவை.

22:29 (IST) 14 May 2023
10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 78 ரன்கள் தேவை.

22:22 (IST) 14 May 2023
9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 83 ரன்கள் தேவை.

22:19 (IST) 14 May 2023
8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 72 பந்துகளில் 92 ரன்கள் தேவை.

22:15 (IST) 14 May 2023
7 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

7 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 78 பந்துகளில் 94 ரன்கள் தேவை.

22:12 (IST) 14 May 2023
பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 84 பந்துகளில் 99 ரன்கள் தேவை.

22:05 (IST) 14 May 2023
5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணா – ரின்கு சிங் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

தற்போது 5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

22:03 (IST) 14 May 2023
ஜேசன் ராய் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

22:01 (IST) 14 May 2023
அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; பந்துவீச்சில் மிரட்டும் சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தி வருகிறது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கிய நிலையில், குர்பாஸ் 1 ரன்னிலும், அடுத்து வந்த வெங்கடேஷ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தற்போது 4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

21:24 (IST) 14 May 2023
பேட்டிங்கில் சொதப்பிய சென்னை; பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த கொல்கத்தாவுக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் கொல்கத்தா அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

21:11 (IST) 14 May 2023
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ஷிவம் துபே – ஜடேஜா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

19 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

21:05 (IST) 14 May 2023
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ஷிவம் துபே – ஜடேஜா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

18 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

21:03 (IST) 14 May 2023
17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ஷிவம் துபே – ஜடேஜா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

17 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

20:47 (IST) 14 May 2023
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ஷிவம் துபே – ஜடேஜா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

15 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

20:42 (IST) 14 May 2023
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ஷிவம் துபே – ஜடேஜா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.

14 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

20:33 (IST) 14 May 2023
11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ஷிவம் துபே, மொயீன் அலி ஜோடி விளையாடி வருகின்றனர்.

11 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

19:52 (IST) 14 May 2023
ருதுராஜ் அவுட்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

19:49 (IST) 14 May 2023
டாஸ் வென்ற சென்னை பேட்டிங்; ஆட்டம் இனிதே தொடக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

3 ஓவர்கள் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

19:08 (IST) 14 May 2023
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்!

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி

19:07 (IST) 14 May 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்!

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர் / கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.

19:05 (IST) 14 May 2023
டாஸ் வென்ற சென்னை பேட்டிங்; கொல்கத்தா பவுலிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதனால், கொல்கத்தா பவுலிங் செய்யும்.

18:43 (IST) 14 May 2023
நேருக்கு நேர்!

ஐ.பி.எல். தொடரில் சென்னை – கொல்கத்தா அணிகள் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 9-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

18:34 (IST) 14 May 2023
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

இம்பாக்ட் பிளேயர் – சுயாஷ் சர்மா

18:32 (IST) 14 May 2023
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

சென்னை சூப்பர் கிங்ஸ்

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே

இம்பாக்ட் பிளேயர் – மதீஷ பத்திரன

18:31 (IST) 14 May 2023
சுனில் நரைனை கைவிடுமா கொல்கத்தா?

கொல்கத்தா அணிக்காக 160 ஆட்டங்களில் 159 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன் ஐ.பி.எல் லெஜண்ட் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த சீசனில், கரீபியன் சுழற்பந்து வீச்சாளரான அவர் தனது மர்மத்தையும், அவரது லயன் மற்றும் லெந்துடன் போராடுவதையும் இழந்ததாகத் தெரிகிறது. அவர் இதுவரை 12 ஆட்டங்களில் 8.50 என்ற எக்கனாமி வீதத்துடன் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா மற்றும் அனுகுல் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், கொல்கத்தா அணி லாக்கி பெர்குசனை தங்கள் வேகப்பந்து வீச்சில் சேர்க்கலாம்.

18:28 (IST) 14 May 2023
பென் ஸ்டோக்ஸ் விளையாட வாய்ப்பு?

பென் ஸ்டோக்ஸ் தேர்வுக்கு தகுதியாக உள்ளார். ஆனால், ஆடும் லெவனில் இடம்பிடித்து கடினமாக உள்ளது. சேப்பாக்கின் தாழ்வான மற்றும் மெதுவான ஆடுகளத்தில் ஸ்டோக்ஸ் உள்ளே வந்தால், மொயீன் அலி வழிவிட வேண்டும்.

18:18 (IST) 14 May 2023
ஆதிக்கத்தை தொடருமா சென்னை?

மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு நல்ல நிலையில் உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி லீக்- கான இதனை வெற்றியுடன் முடித்து ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் இருக்கும். மேலும், சென்னை அணிக்கு எப்போதும் போல் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவும் பக்கபலமாக இருக்கும்.

17:42 (IST) 14 May 2023
அடுத்த சுற்றுக்குள் நுழையுமா கொல்கத்தா? சென்னையுடன் இன்று மோதல்!

நடப்பு சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, அதில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் சரண் அடைந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்த கொல்கத்தா அணி எஞ்சிய ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து ஆறுதல் அடைய முயற்சிக்கும். மேலும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க கொல்கத்தா அணியும் போராடும்.

அந்த அணியில் பேட்டிங்கில் வெங்கடேஷ் அய்யர் (371 ரன்கள்), ரிங்கு சிங் (353 ரன்கள்), கேப்டன் நிதிஷ் ராணா (348 ரன்கள்) ஜாசன் ராய், ரமனுல்லா குர்பாசும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரினும் அச்சுறுத்தல் அளிக்கக்கூடியவர்கள். அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர எடுபடாதது பின்னடைவாக உள்ளது.

17:34 (IST) 14 May 2023
பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா சென்னை?

எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணி சொந்த மண்ணில் மும்பை, டெல்லி அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி, டெல்லியை 140 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பவுலர்கள் பட்டையை கிளப்பினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் யாரும் 25 ரன்னுக்கு மேல் எடுக்கவில்லை. எனவே பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும்.

சென்னை அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே (5 அரைசதத்துடன் 468 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (408 ரன்கள்), ஷிவம் துபே, ரஹானேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே (19 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (16 விக்கெட்), பதிரானா, மொயீன் அலி, தீக்ஷனாவும் அசத்தி வருகிறார்கள். கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சென்னை அணி கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படும்.

சென்னை அணியை பொறுத்தமட்டில் இந்த ஆட்டத்தில் வாகை சூடினால் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் முயலும்.

17:22 (IST) 14 May 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Chennai super kings vs kolkata knight riders live score ipl 2023 csk vs kkr match latest scorecard updates in tamil