Advertisment

சென்னை டெஸ்ட்: ரூட் இரட்டை சதம்; மலைபோல் ரன் குவித்த இங்கிலாந்து

IND vs Eng 1st Test Live Score: கொரோனா பேன்டமிக் காலத்திற்கு பிறகு முதல் முறையாக சர்வதேசப் போட்டி ஒன்றை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பை சென்னை பெற்றிருக்கிறது.

author-image
WebDesk
New Update
சென்னை டெஸ்ட்: ரூட் இரட்டை சதம்; மலைபோல் ரன் குவித்த இங்கிலாந்து

Chennai Test News, IND vs Eng 1st Test Live Score: கொரோனா பேன்டமிக் காலத்திற்கு பிறகு முதல் முறையாக சர்வதேசப் போட்டி ஒன்றை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பை சென்னை பெற்றிருக்கிறது. பிப்ரவரி 5 (இன்று) முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டிதான் அது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் முன்னணி வீரர்கள் இல்லாமல் களம் இறங்கிய இந்திய அணி ரஹானே தலைமையில் சிறப்பாக விளையாடி தொடரை வென்றது. அந்த உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணிக்கு, மீண்டும் கேப்டன் விராட் கோலி திரும்பியிருப்பது பலம். இங்கிலாந்து அணியும் இலங்கையில் தொடரை வென்ற கையுடன் களம் இறங்குகிறது.

இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்ள தகுதி பெற்றுவிடும். அதேசமயம் இங்கிலாந்து 3-0 என வென்றால் அந்தத் தகுதியைப் பெறும்.

காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முந்தைய நாள் பயிற்சியில் சுழற்பந்து வீட்டு ஆலரவுண்டர் அக்‌ஷர் படேல் இடது கணுக்காலில் வலியை உணர்ந்ததால், அவரை முதல் டெஸ்டுக்கு பரிசீலிக்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியுடன் இணைந்திருக்கும் ஷப்பாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் அதிகாரபூர்வ அணியில் இணைக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ கூறியிருக்கிறது. பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது ஆட்டம் தொடங்கும் முன்பு அறிவிக்கப்படும்.

2 வேகம், 3 சுழல்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜுக்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் அணிக்கு திரும்பிய அனுபவ வீரர் இஷாந்த் சர்மாவும், பும்ராவும் வேகப் பந்துவீச்சுத் துறையை கவனிக்கிறார்கள். 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்கிற கலவையுடன் அணி களம் காண்கிறது.

அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், புதிதாக சேர்ந்த ஷப்பாஸ் நதீப் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள். ரோஹித், கப்மான் கில், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷாப் பாண்ட் என அதே பேட்டிங் வரிசை தொடர்கிறது.

இங்கிலாந்து பேட்டிங்:

டாஸ் வென்று களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிபிலி அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி147 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தது. அதிரடி காட்ட முயற்சித்த ரோரி பர்ன்ஸ் சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பந்த்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தில் எல்பி டபிள்யு - ஆகி பூஜ்ய ரன்களுடன் பெவிலியன் நோக்கி நடந்தார்.

இந்த நிலையில் டேனியல் லாரன்ஸ்க்கு பின் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் ம் தொடக்க ஆட்டக்காரர் சிபிலியும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்து சேர்த்தனர். மதிய இடைவேளைக்கு பின் அணிக்கு அதிக ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி வீரர்கள், சில பவுண்டரிகளையும் விளாசியதால், இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளையில், 52 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தனர்.

தொடர்ந்து உணவு இடைவேளை முடிந்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியில், சிம்பிளி கேப்டன் ரூட் இருவரும் இந்திய பந்துவீச்சளை சாதுர்யமாக சமாளித்து ரன்கள் சேர்த்தனர்.  குறிப்பாக தனது 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட், இந்திய பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங்கின் மூலம் சிதறடித்தார்.  164 பந்துகளில் சதமடித்த அவர், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் பலன் கிடைத்தது. சதத்தை நெருங்கிய சிம்பிளி , முதல் நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரான பும்ரா வீசிய 90-வது ஓவரில், 3-வது பந்தில் 87 ரனகளில் சிம்பிளி ஆட்டமிழந்த நிலையில், முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  286 பந்துகளை சந்தித்த சிம்பிளி 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஜோ ரூட் – சிம்பிளி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில், இஙகிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்துள்ளது.  கேப்டன் ஜோ ரூட் 197 பந்துகளில் 14 பவுண்டரி 1 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். இந்திய அணி அணி தரப்பில், பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.  ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி இந்த போட்டியில் பந்துவீச்சில் கோட்டை விட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.  இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் ஆட்டம்:

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணியின் சிபிலி அவுட் ஆகி வெளியேறி இருந்தார். இதனால் அந்த அணியின் விக்கெட்கள் சரியும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சிபிலி விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய பேன் ஸ்டோக்ஸ், 2ம் நாள் ஆட்ட நேரமான இன்று அதிரடி காட்டி வருகின்றார். அவரோடு மறுமுனையில் இருக்கும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் வலுவான நிலையில் உள்ளார். இந்த இரு வீரர்களும் இந்திய அணியின் பந்துகளை தும்சம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பந்து வீச திணறி வரும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் எந்த உத்தியை பயன் படுத்துவது என்று அறியாமல் விழி பிதுங்கிய நிலையில் உள்ளனர். மதிய உணவு இடைவேளைக்குப்பின் புதிய உத்திகளோடு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட், பேன் ஸ்டோக்ஸ் ஜோடி இங்கிலாந்து அணிக்கு வலுவான ரன்களைச் சேர்த்துள்ளனர். 119 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்களை அந்த அணி சேர்த்துள்ளது. ஜோ ரூட் 277 பந்துகளில் 16 பவுடரிகளையும், 1சிக்ஸரையும் அடித்து 156 ரன்களுடனும், பேன் ஸ்டோக்ஸ் 98 பந்துகளில் 9 பவுடரிகளையும், 2 சிக்ஸரையும் அடித்து 63 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மத்திய இடைவேளைக்குப் பின்னும் ஜோ ரூட் மற்றும் பேன் ஸ்டோக்ஸ் இந்திய பந்து வீச்சாளர்களை தும்சம் செய்து வந்தனர். இந்த நிலையில் புதிய யுக்தியை அணியின் கேப்டன் கோலி யோசித்துக் கொண்டிருக்கையில், சுழற் பந்து வீச்சாளர் நதீம் வீசிய பந்தில் லெக் சைடில் சிக்ஸர் அடிக்க முயன்ற பேன் ஸ்டோக்ஸ், அங்கு நின்று கொண்டிருந்த புஜாராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பேன் ஸ்டோக்ஸ் 118 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 82 ரன்கள் சேர்த்திருந்தார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஓலி போப் அணிக்கு ஒரு வழுவான ரன்களைச் சேர்க்க நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். அவ்வப்போது அதிரடி காட்டிய ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போப் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 152-வது ஓவரின் 2வது பந்தில் எல்.பி.டபிள்யூ-வில் அவுட் ஆகினார். அந்த அணிக்காக 89 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்திருந்தார். அதனைத் தொடர்ந்து போட்டியின் 153 வது ஓவரில் இறுதி பந்தை வீசிய சுழற் பந்து வீச்சாளர் நதீமிடம் ஜோ ரூட் (218 (377)) அவுட் ஆனார். அவுடானாலும் 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையோடு பெவிலியன் நோக்கி நடந்தார்.

இங்கிலாந்து அணியில் விக்கெட் ஒரு பக்கம் சரிய தொடங்கி இருந்த நிலையில், பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால் இஷாந்த் ஷர்மா வீசிய 169 ஓவரின் 2வது பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இஷாந்த் ஷர்மா வீசிய அடுத்த பந்திலே அவுட் ஆகி வந்த பாதையை நோக்கி நடையைக் கட்டினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 555 என்ற ஒரு வலுவான ரன்களைச் சேர்த்துள்ளது.

2ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணியின் டாம் பெஸ் 28* (84), மற்றும் ஜாக் லீச் 6* (28) களத்தில் உள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு வலுவான ஒரு ஸ்கோர் உள்ளதால், பாலோ - ஆன் கொடுக்குமா அல்லது 3 வது ஆட்ட நேரத்தில் களத்தில் உள்ள வீரர்களைக் கொண்டு தொடருமா என்று நாளை தான் தெரிய வரும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment