Advertisment

ஸ்குவாஷ் உலகக் கோப்பை: 11 ஆண்டுக்குப் பிறகு சென்னையில் நடத்த திட்டம்

2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்குவாஷ் உலகக் கோப்பை சென்னையில் நடைபெறும் என்று உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai to host 2023 Squash World Cup Tamil News

Chennai to host squash World Cup in 2023, WSF president Zena Wooldridge says India Tamil News

squash World Cup - WSF president Zena Wooldridge Tamil News: மூன்று நாள் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு மாநாடு (World Squash Federation conference (WSF)) மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் (Annual General Meeting (AGM)) சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் 2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்குவாஷ் உலகக் கோப்பை சென்னையில் நடைபெறும் என்றும், 2025 உலகக் கோப்பைப் பதிப்பு இங்கு நடத்தப்படலாம் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், 2011 முதல் நடக்காத இந்த உலகக் கோப்பை போட்டிகள், மிக்ஸ்டு டீம் ஈவன்டாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Advertisment
publive-image

உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ், "புதிய உலகக் கோப்பையை சென்னைக்குக் கொண்டு வர எங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு (WC) இருந்தது, 2011-க்குப் பிறகு அது நடக்கவில்லை. இது புதுப்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதை ஒரு கலப்பு அணி நிகழ்வாக (மிக்ஸ்டு டீம் ஈவன்டாக) மாற்ற வேண்டும். நாங்கள் அதற்கான தகுதி அளவுகோல்களை முடிவு செய்யவில்லை.

சென்னையில் 2024ல் உலக இரட்டையர் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். உலக ஸ்குவாஷ் சம்மேளனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமான பிரதேசமாகவும் மதிப்புமிக்க கூட்டாளராகவும் உள்ளது, அவர்கள் எங்கள் அமைப்பை ஆதரிப்பதில் மற்றும் சில மறக்கமுடியாத உலக நிகழ்வுகளை வழங்குவதில் வலுவான சாதனையை கொண்டுள்ளனர்.

publive-image

கோவிட் காரணமாக எங்கள் மாநாட்டில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகியவை முக்கியமானவை. அதோடு, அமைப்பின் குடும்பத்தை நேரில் மீண்டும் ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னையில் போட்டியை நடத்துவதற்காக தாராளமான ஆதரவையும், விருந்தோம்பலையும் தந்த ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவை (எஸ்.ஆர்.எஃப்.ஐ.) நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் விளையாட்டின் மாற்றத்தை ஆதரிக்க எங்கள் புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம். 2028ல் ஒலிம்பிக் விளையாட்டாக மாறுவதற்கான (லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுகளில்) முந்தைய முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

நாங்கள் 9 பேரின் தேர்வுப்பட்டியலில் ஒருவராக இருக்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நாங்கள் ஒரு நல்ல சமர்ப்பிப்பைச் செய்துள்ளோம். 9 பேரின் குறுகிய பட்டியலில் இருப்பது ஒரு சாதனையாகும்." உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் கூறியுள்ளார்.

ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 2023ல் மீண்டும் தொடங்கப்பட்ட உலகக் கோப்பை சென்னையில் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

publive-image

முன்னதாக, ஸ்குவாஷ் ரேக்கெட்ஸ் ஃபெடரேஷனின் தற்போதைய தலைவரான தேபேந்திரநாத் சாரங்கி, இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் இரண்டு துணைத் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேபேந்திரநாத் சாரங்கி தற்போது உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளார்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai India Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment