scorecardresearch

புரோ கபடி முதல் ஆட்டம்: தமிழ் தலைவாஸ் 42-26 என பாட்னாவை வென்றது

Tamil Thalaivas vs Patna Pirates Pro Kabaddi Match Live Score: தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணி போட்டி லைவ் நிகழ்வுகள்:

Tamil Thalaivas vs Patna Pirates Pro Kabaddi Season 6 Live Score: புரோ கபடி 2018, தமிழ் தலைவாஸ், சென்னை-பாட்னா அணிகள் மோதல்
Tamil Thalaivas vs Patna Pirates Pro Kabaddi Season 6 Live Score: புரோ கபடி 2018, தமிழ் தலைவாஸ், சென்னை-பாட்னா அணிகள் மோதல்

Tamil Thalaivas vs Patna Pirates Pro Kabaddi Live Streaming: புரோ கபடி லீக் தொடரின் 6-வது சீசன், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்.7) தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

Tamil Thalaivas vs Patna Pirates LIVE Kabaddi Score, Pro Kabaddi League 2018 Season 6 Kabaddi Match Live Updates: தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணி போட்டி லைவ் நிகழ்வுகள்:

9:05  PM:கடைசி கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்த பாட்னா அணி புள்ளிகள் எண்ணிக்கையில் சற்றே முன்னேறியது. குறிப்பாக பாட்னா பைரேட்ஸ் கேப்டன் பர்தீப் நர்வால் புள்ளிகளை குவித்தார். இதனால் இறுதியில் 42-26 என தமிழ் தலைவாஸ் வென்றது.

8:50 PM : இரவு 8.50 நிலவரப்படி 39-15 என தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. இன்னும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆட்டம் உள்ளது.

8:43 PM: தமிழ் தலைவாஸ் 36-13 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

8:18 PM: முதல் 18 நிமிடங்களில் 16-6 என தமிழ் தலைவாஸ் முன்னிலை வகித்தது.

8:00 PM: கமல்ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தேசிய கீதம் பாட புரோ கபடி போட்டி தொடங்கியது.

7:45 PM: இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும். மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும். தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் இன்று முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.

7:40 PM : இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Chennai vs patna pro kabaddi match live score

Best of Express