Advertisment

சென்னையின் FC-க்கு புதிய சாம்பியன் பயிற்சியாளர்: வச்சாச்சு ‘கப்’புக்கு குறி!

Chennaiyin FC isl 2020 New Coach Csaba Laszlo: இவரது சர்வதேச அனுபவம் சென்னையின் எஃப்.சி வீரர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அணியின் உரிமையாளர்களில் ஒருவரான விட்டா டேனி கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
சென்னையின் FC-க்கு புதிய சாம்பியன் பயிற்சியாளர்: வச்சாச்சு ‘கப்’புக்கு குறி!

Chennaiyin FC isl 2020 New Coach Csaba Laszlo

Chennaiyin FC Tamil News, Chennaiyin FC isl 2020 New Coach Csaba Laszlo: சென்னையின் FC கால்பந்து அணிக்கு புதிய சாம்பியன் பயிற்சியாளராக ஸபா லாஸ்லோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது பயிற்சியில் சாம்பியன் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கும் சென்னையின் FC.

Advertisment

சி.எஸ்.கே அளவுக்கு இல்லாவிட்டாலும், கால்பந்து அணியான சென்னையின் FC-க்கும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். 2019-20 ஆம் ஆண்டு ஐ.எஸ்.எல் ஆட்டத்தில் சென்னையின் FC இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றது. இரு முறை ஐ.எஸ்.எல். சாம்பியன் பட்டம் வென்ற அணியும்கூட இது.

 Chennaiyin FC isl 2020 New Coach Csaba Laszlo: சென்னையின் எஃப்.சி பயிற்சியாளர்

சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த ஒவன் கொய்லே, ஜாம்ஷெட்பூர் FC அணியின் தலைமை பயிற்சியாளராக அண்மையில் ஒப்பந்தம் பெற்றார். எனவே சென்னை அணிக்கு பயிற்சியாளர் தேடும் படலம் நடந்தது. தற்போது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 56 வயது ஸபா லாஸ்லோ சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஞாயிற்றுக் கிழமை இந்த அறிவிப்பு வெளியானது.

பல்வேறு கிளப்களிலும், சர்வதேச அணிகளிலும் 20 ஆண்டுகளாக பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் லாஸ்லோ. ஒரு ஆசிய அணிக்காக இவர் பணிபுரிவது இதுவே முதல்முறை. மொத்தம் 8 நாடுகளில் பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார் இவர். அவற்றில் உகாண்டா, லித்தேனியா ஆகிய தேசிய அணிகளும் அடங்கும்.

Borussia Monchengladbach B அணிக்கு இவர் பயிற்சியாளராக பணியாற்றியபோது பல்வேறு இளம் நட்சத்திரங்களை உருவாக்கினார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், ஃபிஃபா உலகக் கோப்பை வெண்கலப் பதக்கம் வென்றவரான மார்செல் ஜான்சன். ஜெர்மன் உலகக் கோப்பையை ஹங்கேரி அணி வென்றபோது சாம்பியன் பயிற்சியாளர் லோதர் மாத்தூஸுக்கு உதவியாளராக இருந்தவர் இவர். லாஸ்லோவின் பயிற்சியின் கீழ் உகாண்டா அணி 167-வது ரேங்கில் இருந்து 97-வது ரேங்கிற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இவரது சர்வதேச அனுபவம் சென்னையின் எஃப்.சி வீரர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அணியின் உரிமையாளர்களில் ஒருவரான விட்டா டேனி கூறியிருக்கிறார்.

சென்னை அணி கடந்த ஐ.எஸ்.எல் சிசன் இந்திய வீரர்கள் 11 பேரை மீண்டும் தக்க வைத்திருப்பதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தவிர பிரேசில் இரட்டையர்களான டிஃபெண்டர் எலி சபி, கிரியேட்டிவ் மிட் ஃபீல்டர் ரஃபேல் கிரிவெல்லரோ ஆகியோரையும் வசப்படுத்தி வைத்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Indian Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment