இந்தியன் சூப்பர் லீக் 2018: முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எஃப்சி!

பெங்களூருவில் நடக்கும் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எஃப்சி அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எஃப்சி அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது.

இதில், முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வென்றது.

இந்நிலையில், இன்று பெங்களூருவில் நடக்கும் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

சென்னையின் எஃப்சி அணி வீரர்கள் விவரம்:

கோல் கீப்பர்கள்: கரன்ஜித் சிங், சஞ்சிபன் கோஷ், நிகில் பெர்னார்ட்

டிஃபென்டர்கள்: மெய்ல்சன் ஆல்வ்ஸ், எலி சபியா, இனிகோ கால்ட்ரென், ஜெர்ரி லால்ரின்சுலா, டோன்டோன்பா சிங், லால்டின்லியானா ரென்த்லெய், சோமிங்லியானா ரால்டே, ஹென்றி ஆண்டோனே.

மிட்ஃபீல்டர்கள்: ரஃபெல் அகஸ்டோ, க்ரெகோரி நெல்சன், ஆண்ட்ரியா ஓர்லாண்டி, ஃபிரான்சிஸ்கோ ஃபெர்னாண்டஸ், தோய் சிங், அனிருத் தாபா, ஜெர்மன்பரீத் சிங், சீனிவாசன் பாண்டியன், ஐசக் வன்மல்ஸாமா, பெதஷ்வோர் சிங், சுனுன்மாவியா.

ஃபார்வேர்ட்ஸ்: ஜேஜே லால்பெக்லா, முஹம்மத் ரஃபி, கார்லஸ் ஆண்டோனியோ சலோம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close