/tamil-ie/media/media_files/uploads/2020/08/Dhoni.jpg)
Chennimalai weaver made handwoven gift for cricketer MS Dhoni : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி. நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர். முன்பு சச்சினின் தீவிர ரசிகராக இருந்த இவர் பிறகு தோனியின் மிகப்பெரிய ரசிகராக மாறினார். தோனியின் ஓய்வால் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தோனியின் அழகான உருவத்தை போர்வையில் நெய்து அன்பளிப்பு ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார் அப்புசாமி.
தோனியின் கிரிக்கெட் என்பதை காட்டிலும் அவர் தன் மகளுடன் கொண்டிருக்கும் உறவு அப்புசாமியை மிகவும் நெகிழ வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் தோனியை ஸிவாவுடன் பார்க்கும் பார்க்கும் போது தன்னுடைய மகள் குறித்தும் தன்னுடைய இளமை காலம் குறித்தும் நினைத்து பார்ப்பதாக கூறுகிறார் அப்புசாமி. இதற்காக அக்ரிலிக் யார்ன் கொண்டு, 20 நாட்கள் உழைத்து அந்த போர்வையை 44 x 47 செ.மீ அளவில் நெய்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியின் போது அதனை அவருக்கு தரலாம் என்று காத்திருந்த அவர் அமீரகத்தில் போட்டிகள் நடப்பதால் கொஞ்சம் வருத்ததில் தான் இருக்கிறார். இருப்பினும் நிச்சயமாக தோனியை சந்தித்து இந்த அன்பளிப்பை வழங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.