Chepauk Super Gillies vs Dindigul Dragons, 11th Match Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
திண்டுக்கல் டிராகன்ஸ்:
சிவம் சிங், எஸ் அருண், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), சி சரத் குமார், சுபோத் பதி, ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), பூபதி குமார், எம் மதிவண்ணன், பி சரவண குமார், ஆதித்யா கணேஷ், ராகுல்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
என் ஜெகதீசன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சந்தோஷ் ஷிவ், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், உத்திரசாமி சசிதேவ், எஸ் ஹரிஷ் குமார், ராமலிங்கம் ரோஹித், ரஹில் ஷா, எம் சிலம்பரசன், ராக்கி பாஸ்கர், லோகேஷ் ராஜ்
திண்டுக்கல் பேட்டிங்
திண்டுக்கல் அணியில் தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடியது. முதல் விக்கெட்க்கு ராகுல் – சிவம் ஜோடி 34 ரன்கள் சேர்த்தது. ராகுல் 20 ரன்களிலும், சிவம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த 3 பேர் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகினர். பின்னர் ஆதித்யா- சரத் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆதித்யா 44 ரன்களிலும், சரத் 25 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த சுபோத் 31 ரன்கள் எடுத்தார். கடைசியில் களமிறங்கியவர்கள் ஒற்றை ரன்களில் அவுட் ஆக திண்டுக்கல் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் ரஹில் 3 விக்கெட்களையும், ரோகித் 2 விக்கெட்களையும், ஹரீஷ், லோகேஷ், சிலம்பரசன், அபாரஜித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சென்னை பேட்டிங்
171 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரதோஷ் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்தாக பாபா அபாரஜித் களமிறங்கி அதிரடியாக ஆடினார். இதற்கிடையில், மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ஜெகதீசன் நிதானமாக விளையாடி 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த 3 பேரும் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகினர். சிக்சர்களாக விளாசிய அபாரஜித் 40 பந்துகளில் 74 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகினர். இந்தநிலையில், சென்னை அணிக்கு கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 2 பந்துகளிலும் சென்னை அணி 2 விக்கெட்களை இழக்க திண்டுக்கல் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும், சரவணக்குமார் 2 விக்கெட்களையும், அருண் மற்றும் சுபோத் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil