செஸ் ஒலிம்பியாட் போட்டி: சுவாரஸ்ய தகவல்கள்

இதேவேளையில் சென்னயிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூவனூர் கிராமத்தில் இருக்கும் ”சதுரங்க வல்லபநாதர்” என்ற 14 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் தற்போது அதிகம் கவனம் பெற்றுள்ளது.

இதேவேளையில் சென்னயிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூவனூர் கிராமத்தில் இருக்கும் ”சதுரங்க வல்லபநாதர்” என்ற 14 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் தற்போது அதிகம் கவனம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
செஸ் ஒலிம்பியாட் போட்டி: சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கிறது.  பிரதமர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்தப் போட்டிக்கான விளம்பர பாடலை தமிழ்நாடு அரசு தயாரித்துள்ளது. அதில் வரும் பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசரை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இதில், சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு - வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

Advertisment
publive-image

அதில் முதல்வர் ஸ்டாலின் நடந்துவரும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. நேப்பியர் பாலம் ஒரு செஸ் போர்டை போல் வடிவகைக்கப்பட்டதால் பொதுமக்கள் அங்கே குவிந்தனர். மேலும் புகைப்படங்கள் எடுத்து தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக  முன்னாள் உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் கூறுகையில் “இதுபோல் சென்னை செஸ் போட்டியின்மீது ஈடுபாடு கொண்டதை நான் பார்ததில்லை. மேலும் நேப்பியர் பாலம் கருப்பு- வெள்ளை வண்ணம் பூசப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னையில் உள்ள அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பற்றி தெரிந்துகொள்வார்கள் “ என்று அவர் தெரிவித்தார்.  

publive-image
Advertisment
Advertisements

உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் கூறுகையில் “ தமிழ்நாடு அல்லது சென்னை தற்போது உலக செஸ் விளையாட்டில் முக்கிய இடமாக இருக்கிறது. நானும் இந்த கொண்டாடத்தின் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் முதல் செஸ் கிளப்பை 1972 உருவாக்கிய மானுயெல் அர்சன் கூறுகையில், “ இதுபோல செஸ் விளையாட்டை உணர்ச்சிகரமாக சென்னை கொண்டாடியதில்லை. இதன் ஒரு அங்கமாக நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. செஸ் போட்டியின் பெருமை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேப்பியர் பாலமானது புனித ஜார்ஜ் கோட்டை முதல் மெரினா பாலம் வரை தொடர்புபடுத்துகிறது. இந்த இடங்களில் இருப்பவர்கள் செஸ் விளையாட்டை அதிகம் விளையாடுவதில்லை. மேலும் இரவில் இந்த பாலத்தில் செல்வது, ஆபத்து என்றே கருதப்படுகிறது. ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது. இப்பாலத்தை செஸ் போர்டை போல் வடிவமைத்தது ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகிறது.

publive-image

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விழா ஒன்றில் பேசியபோது “ சென்னையில் இருக்கும் அனைவரும் ராஜா மற்றும் ராணிகள்” என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும் முதல்வர் நிகழ்வுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.  இந்நிலையில் தமிழக பாஜக மட்டுமே சிறிது வருத்தமாக இருக்கிறது. சுவர் ஒட்டிகளில் பிரதமரின் படங்கள் இல்லை என்பதே அவர்களின் ஆந்தங்கமாக இருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் முதல் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி இது என்பதால் மேலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் கடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யாவுடன் தங்க பதக்கத்தை இந்தியா பகிர்ந்து கொண்டதால், இந்த முறை இந்திய வீரர்கள் வெல்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

publive-image

இதேவேளையில் சென்னயிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூவனூர் கிராமத்தில் இருக்கும் ”சதுரங்க வல்லபநாதர்” என்ற 14 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் தற்போது அதிகம் கவனம் பெற்றுள்ளது. இதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “ செஸ்களின் ராஜா” என்று வரும் என்பதால் இப்போது இது கவனம் ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்தமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு மாஸ் காட்டி வருகிறது.    

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: