Chennai Chess Olympiad 2022 Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பிரமாண்ட தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் தொடங்க உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது. ஜூலை 21 அன்று காஷ்மீர் வழியாக இந்தியா நடத்திய ஜோதி ஓட்டத்தை வாபஸ் பெற்றதே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார், ரேடியோ பாகிஸ்தானுக்கு அளித்த அறிக்கையில், “சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக ஏற்கனவே ஒரு பாகிஸ்தானியக் குழு பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இந்த மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வை அரசியலாக்க இந்தியா தேர்வு செய்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.