Chennai Chess olympiad - Geert van der Velde Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்தது. செஸ் ஒலிம்பியாட் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர்கள் பண்பாட்டை விளக்கும் வகையில் நினைவு பரிசு மற்றும் பரிசு பொருட்கள் போன்றவையும் வழங்கப்பட்டது.
சுமார் 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் பி அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் ஏ அணியும் பெற்றது.
நாடு திரும்பிய பிறகும் தோசையை மறக்க முடியாத நெதர்லாந்து பிரபலம்…
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே வெல்டே வந்து இருந்தார். இவர் இசைக் கலைஞராகவும், செஸ்சபிள் இணையத்தளத்தின் சி.இ.ஓ. வாகவும் இருந்து வருகிறார். சென்னைக்கு வந்த இவருக்கு இங்குள்ள உணவு வகைகள் மிகவும் பிடித்து போனது. சமீபத்தில் கூட இவர் தமிழ்நாட்டின் வத்தக்குழம்பு தனக்கு மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், கிரிட் வான்டே வெல்டே, வீட்டில் தனது தாயுடன் சேர்ந்து தோசை சுட்டு சாப்பிட்டு இருக்கிறார்.
சொந்த நாடு திரும்பிய அவருக்கு, தமிழ்நாட்டு உணவு மீதான ஈர்ப்பு குறையாமல் இருக்கும் நிலையில், அவர் தனது தாயுடன் சேர்ந்து தோசை சுட்டு அசத்தி இருக்கிறார்.
இது குறித்து தொடர்பாக கிரிட் வான்டே வெல்டே தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவுக்கு வந்த எனது தாய்க்கு, அங்குள்ள உணவுகள் மிகவும் பிடித்து போய்விட்டது. அங்கிருந்த உணவுகளின் புகைப் படங்களை பார்த்துவிட்டு, தற்போது அவர் எங்களுக்கு வீட்டிலேயே தோசை சுட்டு கொடுத்தார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு செஸ் ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
My mom was inspired by all the 🇮🇳 food photos at the #ChessOlympiad so she made homemade dosas for us tonight!
❤️🌶🙏🏼 pic.twitter.com/EeG02YgpLL— Geert van der Velde (@blackatlantic) August 12, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.