Advertisment

அதிரடியாக முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்... செஸ் லைவ் ரேட்டிங் டாப் 10-க்குள் 3 இந்தியர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் கிட்டத்தட்ட 6 மணி நேர போட்டிக்குப் பிறகு சிறப்பான வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் அவர் ஃபிடே லைவ் ரேட்டிங்கில் (நேரலை மதிப்பீடுகளில்) 5வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Chess Olympiad Gukesh rises to World No 5 in live ratings 3 Indians in top 10 Tamil News

ஃபிடே-வின் இந்த லைவ் ரேட்டிங் ஒவ்வொரு மாத இறுதியிலும் புதுப்பிக்கப்படும். ஃபிடே-வால் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது அவை நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த 4-வது சுற்றில் இந்தியா செர்பியாவை 3.5-0.5 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்திய வீரர் குகேஷ் (ஜி.எம் அலெக்சாண்டர் ப்ரெட்கே), அர்ஜுன் எரிகைசி (ஜி.எம் அலெக்ஸாண்டர் இண்டிஜிக்) மற்றும் விடித் குஜராத்தி (ஜி.எம் வெலிமிர் ஐவிக்) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தினர். இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஜி.எம் அலெக்ஸ் எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Chess Olympiad: Gukesh rises to World No 5 in live ratings, 3 Indians in top 10 in live rankings

இந்த 4-வது சுற்றில் சில முன்னணி அணிகள் சரிவைக் சந்தித்தன. ஆனால், புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தை உறுதிப்படுத்தியது. இந்திய வீரர்களும் லைவ் ரேட்டிங்கில் தங்களின் ரேட்டிங் உயர்வைக் கண்டனர். நான்காவது சுற்றுக்குப் பிறகு, இந்தியா, ஸ்பெயின், சீனா, வியட்நாம், அஜர்பைஜான், போலந்து, ஹங்கேரி மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு மேட்ச் புள்ளிகளைக் கொண்ட செஸ் ஒலிம்பியாட் நிலைகளில் எட்டு அணிகள் மட்டுமே மீதமுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் கிட்டத்தட்ட 6 மணி நேர போட்டிக்குப் பிறகு சிறப்பான வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் அவர் ஃபிடே லைவ் ரேட்டிங்கில் (நேரலை மதிப்பீடுகளில்) 5வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஃபிடே-வின் இந்த லைவ் ரேட்டிங் ஒவ்வொரு மாத இறுதியிலும் புதுப்பிக்கப்படும். ஃபிடே-வால் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது அவை நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும். 

ஃபிடே லைவ் ரேட்டிங்கில் குகேஷ் இப்போது 2772.7 என மதிப்பிடப்பட்டுள்ளார். அவர் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை விட ஒரு இடம் பின்னிலையில் இருக்கிறார். அர்ஜுன் எரிகைசி லைவ் ரேட்டிங்கில் 2785.0 என மதிப்பிடப்பட்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தரவரிசையில் அவர் தன்னை நிலை நிறுத்தி வருகிறார். மற்றொரு தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா இப்போது 2753.4 லைவ் ரேட்டிங்கைப் பெற்றுள்ளார். அவர் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார். 

இதன் மூலம் ஃபிடே லைவ் ரேட்டிங்கில் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இப்போது மூன்று இந்திய வீரர்கள் உள்ளனர். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், லைவ் ரேட்டிங்கில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

International Chess Fedration Chess Vishwanathan Anand Pragnanandha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment