Advertisment

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்: ஜோதியை ஏற்றி வைக்கிறார் மோடி!

PM to launch historic torch relay for 44th Chess Olympiad on 19th June Tamil News: 100 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா இந்த மதிப்புமிக்க நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

author-image
WebDesk
New Update
Chess Olympiad; pm modi to launch the first-ever Torch Relay for the 44th edition

chess olympiad 2022 PM narendra modi going to light the torch

The 44th Chess Olympiad will be held in Chennai from July 28 to August 10, 2022.Starting from the national capital, the historic Olympiad Torch Relay will travel 75 cities across the country,Prime Minister Shri Narendra Modi will launch the historic torch relay for the 44th Chess Olympiad on 19th June at 5 PM at Indira Gandhi Stadium.

Advertisment

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை மாதம் 28-ந் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ஜோதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரும் நகரங்களுக்கு சென்று ஜூலை மாதம் 28-ந் தேதி தமிழகம் கொண்டு வரப்படும். பின்னர் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

100 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா இந்த மதிப்புமிக்க நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் 188 நாடுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதையொட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் போட்டியை நடத்துவதற்கான அனைத்து வகையான முன்னேற்பாட்டு பணிகளை 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் அனைத்து பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த வரலாற்று தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்போதும் ஒலிம்பிக் டார்ச் ரிலே கான்செப்ட் மூலம் ஈர்க்கப்பட்டேன். இப்போது செஸ்ஸிலும் ஒன்று உள்ளது. ஆனால் இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அது எப்போதும் இந்தியாவில் தொடங்கும் என்பது தான். ஒரு இந்தியனாக, இந்த உண்மையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், ”என்று ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளரும் ஒலிம்பியாட் இயக்குனருமான பாரத் சிங் சவுகான், "இந்தியாவில் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கு செஸ் ஒலிம்பியாட் டார்ச் ரிலே ஒரு சிறந்த ஊடகம். இது நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, பல நபர்களை ஊக்கப்படுத்துவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அனுபவமாக இருக்கும். செஸ் உலகில் இந்தியாவை பெரும் சக்தியாக மாற்றுவதற்கு இது பெரும் பங்களிப்பை அளிக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

"இந்த ஒலிம்பியாட் டார்ச் ரிலே இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயத்தை சேர்க்கும். மேலும், இந்தியாவில் தொடங்கி ஒவ்வொரு பதிப்பிலும், தலைமுறைகளை இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும். எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு பிரதமர் மோடி-க்கு கூட்டமைப்பு சார்பாக நன்றி. இத்தகைய அந்தஸ்து கொண்ட நிகழ்வுகள் நிறைய முயற்சி எடுக்கின்றன. மேலும் அரசு மற்றும் பிற பங்குதாரர்கள் உட்பட அனைவரிடமிருந்தும் ஆதரவைப் பெற்றதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chess Tamilnadu Pm Modi Sports International Chess Fedration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment