முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

Chetan chauhan covid : கவாஸ்கர் உடனான இவரது பார்ட்னர்ஷிப், 59 போட்டிகளில் 3022 ரன்களை எடுத்துள்ளது. இதில் 10 போட்டிகளில் சதத்தை கடந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், சவுகான், 2084 ரன்களை எடுத்துள்ளார். சவுகான் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

By: Updated: July 12, 2020, 09:39:13 AM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகானுக்கு (வயது 72) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் துவக்க வீரராக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். சுனில் கவாஸ்கர் உடனான இவரது பார்ட்னர்ஷிப், 1970ம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களின் நீங்காத நினைவுகளாக இருந்துவந்தது. இவர்களது பார்ட்னர்ஷிப்பே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சேத்தன் சவுகான், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல், 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் ஆவார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவரது பங்களிப்பு மிக வலுவானது ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில், சக வீரருடனான இவரது பார்ட்னர்ஷிப், எதிரணிக்கு பெரும்நெருக்கடியை அளித்து வந்தது.

கவாஸ்கர் உடனான இவரது பார்ட்னர்ஷிப், 59 போட்டிகளில் 3022 ரன்களை எடுத்துள்ளது. இதில் 10 போட்டிகளில் சதத்தை கடந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், சவுகான், 2084 ரன்களை எடுத்துள்ளார். சவுகான் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
1990ம் ஆண்டில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உத்தரபிரதேச அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

சேத்தன் சவுகானுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாசிட்டிவ் என்று முடிவு வரவே, சவுகான், சிகிச்சைக்காக உத்தரபிரேதச தலைநகர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Former cricketer Chetan Chauhan tests positive for Covid-19

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Chetan chauhan covid chauhan minister india sportspersons covid india celebrity covid coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X