‘புஜாராவுக்கு பந்து வீசுவது மிகக் கடினம்; வலி எங்களுக்கு தான் தெரியும்’ – பேட் கம்மின்ஸ்

‘கடவுளே.. ஏன் நான் இந்த கிரிக்கெட்டுக்கு வந்தேனோ’ என்று நினைத்து பவுலர்களை எரிச்சலடைய வைத்த உலகின் விரல் விட்டு எண்ணக் கூடிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய வீரர் ராகுல் டிராவிட். இவரது பேட்டிங்கை எதிர்கொள்ள, பவுலர்களுக்கு தனி சகிப்புத் தன்மை தேவை. அதனால், தான் சச்சின், கங்குலி, லக்ஷ்மன், சேவாக் ஆகிய லெஜண்டுகளை கடந்து தனித்து தெரிந்தார் டிராவிட். டிராவிட்டுக்கு பிறகு, இந்திய அணிக்கு கிடைத்த அப்படியொரு வீரர் என்றால் சந்தேகமின்றி அது புஜாரா தான். ‘மனிதன்னா […]

Cheteshwar Pujara is hardest to bowl at in Test cricket Pat Cummins
Cheteshwar Pujara is hardest to bowl at in Test cricket Pat Cummins

‘கடவுளே.. ஏன் நான் இந்த கிரிக்கெட்டுக்கு வந்தேனோ’ என்று நினைத்து பவுலர்களை எரிச்சலடைய வைத்த உலகின் விரல் விட்டு எண்ணக் கூடிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய வீரர் ராகுல் டிராவிட். இவரது பேட்டிங்கை எதிர்கொள்ள, பவுலர்களுக்கு தனி சகிப்புத் தன்மை தேவை. அதனால், தான் சச்சின், கங்குலி, லக்ஷ்மன், சேவாக் ஆகிய லெஜண்டுகளை கடந்து தனித்து தெரிந்தார் டிராவிட்.


டிராவிட்டுக்கு பிறகு, இந்திய அணிக்கு கிடைத்த அப்படியொரு வீரர் என்றால் சந்தேகமின்றி அது புஜாரா தான்.

‘மனிதன்னா இப்படி வாழனும்’ – கொரோனா வைரஸால் உலகின் வயதான மராத்தான் வீரரின் குரு காலமானார்

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு பந்து வீச கடினமாக இருப்பது இந்தியாவின் புஜாராதான் என்று இப்போதைய உலகின் சிறந்த ஆஸ்திரேலிய பவுலர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்ந்த கோலி தலைமை இந்திய அணியின் ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியில், புஜாரா 4 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், ஒரு அரைசதம் என்று 521 ரன்கள் விளாசினார். இது அவருக்கு ஒரு பெரிய தொடராக அமைந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு மேற்கொண்ட கேள்வி பதில் நிகழ்வில் பதிலளித்த புஜாரா, “எங்களுக்கு கடும் போராட்டம் அளித்த நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசமான வீரரைத் தேர்வு செய்கிறேன், புஜாராவை கடினமான பேட்ஸ்மேன் எனக் கருதுகிறேன், எங்களுக்கு உண்மையில் அவர் பெரிய வலியாகவே இருந்தார்.

உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த கம்பீர் – வாழ்க மனிதநேயம்!

அந்தத் தொடரில் இந்தியாவுக்காக பாறை போல் நின்றார். அவரை வீழ்த்துவது எளிதல்ல. அவரது கவனம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவருக்கு வீசுவது எனக்குக் கடினமாக இருந்தது” என்றார்.

அந்த மைல்கல் தொடரில் புஜாரா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cheteshwar pujara is hardest to bowl at in test cricket pat cummins

Next Story
‘மனிதன்னா இப்படி வாழனும்’ – கொரோனா வைரஸால் உலகின் வயதான மராத்தான் வீரரின் குரு காலமானார்‘Waheguru Baba’‘ustad’ to world’s oldest marathoner dies of corona virus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com