scorecardresearch

பாகிஸ்தான் வீரருடன் புஜாரா செம்ம பார்ட்னர்ஷிப்: நட்பை வெளிப்படுத்திய வீடியோ

கவுண்டி போட்டியில், இந்திய வீரர் புஜாராவும் பாகிஸ்தான் வீரர் முஹமது ரிஸ்வானும் செம பார்ட்னர்ஷிப் ரன் அடித்து ஆடியிருக்கிறார்கள். இருவரும் நட்பை வெளிப்படுத்திய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

Cheteshwar Pujara, Cheteshwar Pujara county, county cricket, pujara and rizwan, pujara county, pujara rizwan, சத்தேஸ்வர் புஜாரா, முகமது ரிஸ்வான், புஜாரா ரி்ஸ்வான் பார்ட்னர் ஷிப், சசெக்ஸ் கவுன்டி அணி, துர்ஹாம் அணி, pujara sussex, sussex vs durham, sussex vs durham live score, mohammad rizwan, sussex cricket, sussex county, india vs pakistan, india pakistan

இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியைத் தவிர வேறு எந்த போட்டிகளிலும் விளையாடாத நிலையில் கவுண்டி போட்டியில், இந்திய வீரர் புஜாராவும் பாகிஸ்தான் வீரர் முஹமது ரிஸ்வானும் செம பார்ட்னர்ஷிப் ரன் அடித்து ஆடியிருக்கிறார்கள். இருவரும் நட்பை வெளிப்படுத்திய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இந்த போட்டியில், சதேஷ்வர் புஜாரா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

லண்டனில் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் சதேஷ்வர் புஜாரா, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

கவுண்டி கிரிக்கெட் போட்டியில், டர்ஹாம் அணிக்கு எதிரான சசெக்ஸ் போட்டியில் 3 ஆம் நாள் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர் சத்தேஷ்வர் புஜாரா மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி ரன் அடித்துள்ளனர் சசெக்ஸ் அணியில் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் புஜாரா, அந்த அணிக்காக இரண்டாவது இரட்டை சதம் அடித்தார். அவர் 334 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார், மேலும், பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுடன் சேர்ந்து 154 ரன்கள் எடுத்தார். ரிஸ்வான் 145 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

இந்திய வீரர் சத்தேஷ்வர் புஜாரா மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இருவரும் கடைசிநேர பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி உள்ளனர். இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி உரையாடியதை கவுண்டி சாம்பியன்ஷிப் நிர்வாகம் புகழ்ந்துள்ளது. மேலும், பயிற்சியின்போது, இருவரும் உரையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இருவரும் என்ன பேசினார்கள் என்பதை முழுவதுமாக கேட்க முடியவில்லை. ஆனால், ரிஸ்வான் புஜாராவிடம் தனது முந்தைய கவுண்டி போட்டி பற்றி பேசியது போல தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cheteshwar pujara mohammad rizwan good partnership they chat during sussex training session