Advertisment

வெள்ளி வென்ற வீரர்கள்: முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு

அகில இந்திய அளவில் புதுடெல்லியில் கடந்த 16.10.2023 முதல் 19.10.2023 வரை  நடைபெற்ற சிவில் சர்வீஸ் (அகில இந்திய அரசு ஊழியர்களுக்கான)கோ -கோ விளையாட்டு போட்டி நடந்தது.

author-image
WebDesk
New Update
Puducherry athletes who won in Delhi

டெல்லியில் வெற்றி பெற்ற புதுச்சேரி விளையாட்டு வீரர்களை முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்தார்

புதுச்சேரி மாநிலத்தில் சிவில் சர்வீஸ் அகில இந்திய அரசு ஊழியர்களுக்கான கோ  கோ விளையாட்டு போட்டியில் புதுச்சேரி மகளிர் அணி வெள்ளிப் பதக்கமும் ஆண்கள் பிரிவு வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். அவர்களை இன்று தனது அலுவலகத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறினார்.

அகில இந்திய அளவில் புதுடெல்லியில் கடந்த 16.10.2023 முதல் 19.10.2023 வரை  நடைபெற்ற சிவில் சர்வீஸ் (அகில இந்திய அரசு ஊழியர்களுக்கான)கோ -கோ விளையாட்டு போட்டி நடந்தது.

Advertisment

இந்தப் போட்டியில் புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் சிவில் சர்வீஸ் முடித்தவர்கள் புதுச்சேரி மகளிர் அணி சார்பில் கலந்து கொண்டனர்.

இதில் *புதுச்சேரி மகளிர் அணி வெள்ளி பதக்கமும், ஆண்கள் பிரிவு அணி வெண்கல பதக்கமும் பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனைகளை,  விளையாட்டு துறை இயக்குநர்  செந்தில்குமார் தலைமையில், புதுச்சேரி  முதலமைச்சர் ரங்கசாமி இன்று (அக்.24) நேரில் சந்தித்து , வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். அப்போது, அவருடன்  புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் உடன் இருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment