Advertisment

பளார் அறை விட்ட காதலி… பொது இடத்தில் மைக்கேல் கிளார்க் அவமானம்; பொழைப்பும் போச்சு!

நூசா பூங்காவில் தகராறு செய்ததற்காக மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோ ஆகியோருக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Clarke slapped by girlfriend in wild brawl, might lose India contract Tamil News

Former Australia captain Michael Clarke with his partner Jade Yarborugh. (Instagram/Michael Clarke)

News about Michael Clarke, girlfriend Jade Yarbrough Tamil News: 2015 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியவர் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவர் ஆஸ்திரேலியாவை அணிக்காக 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் முறையே 8643, 7981 மற்றும் 488 ரன்கள் எடுத்துள்ளார். 2015-க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிளார்க் தற்போது தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், கிளார்க் குயின்ஸ்லாந்தில் தனது காதலி ஜேட் யார்பரோவுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

41 வயதான ஜேட் யார்ப்ரோ, அவரது சகோதரி ஜாஸ்மின் மற்றும் அவரது கணவரும் ஊடக ஆளுமையுமான கார்ல் ஸ்டெபனோவிக் ஆகியோர் ஜனவரி 10 ஆம் தேதி குயின்ஸ்லாந்தில் உள்ள நூசாவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்தனர். அப்போது உணவகத்திற்கு வெளியே இந்த மோதல் நடைபெற்றுள்ளது

publive-image

அந்த 2 நிமிட வீடியோவில், யார்பரோ கிளார்க்கை கன்னத்தில் அறைகிறார். மேலும் கிளார்க் தன்னை ஏமாற்றியதாக ஜேட் யார்போரோ குற்றம் சாட்டுவதைக் கேட்கலாம். பிப்ரவரியில் கிளார்க்கின் இந்தியாவுக்குத் திட்டமிடப்பட்ட பயணத்தை யார்ப்ரோ குறிப்பிட்டார். கிளார்க் தனது முன்னாள் காதலி தன்னுடன் இந்தியாவுக்கு வரச் சொன்னதாக அவர் சுட்டிக்காட்டினார். காட்சிகளில் சட்டை அணியாத கிளார்க் ஒரு பூங்காவில் நிற்கிறார். ஒரு குழு சூழ்ந்து கொண்டு நிலைமையை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதே நேரத்தில் ஆத்திரமடைந்த யார்ப்ரோ அவரிடம் கத்துகிறார், பின்னர் அவரை முகத்தில் அறைந்தார்.

முன்னாள் காதலியான பிப் எட்வர்ட்ஸுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றியதாக யார்ப்ரோ குற்றம் சாட்டுவதையும் அந்தக் காட்சிகள் காட்டுகிறது. இது குறித்து தி டெய்லி டெலிகிராப்பிடம் பேசிய கிளார்க், "இந்த மோதலுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் எனது செயல்களால் நான் நொறுங்கிவிட்டேன் என கூறி உள்ளார்.

நூசா பூங்காவில் தகராறு செய்ததற்காக மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோ ஆகியோருக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய தரப்பில் அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்திய மண்ணில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9 முதல் நாகபூரில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான வர்ணனை ஒப்பந்தத்தை கிளார்க் இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ உடன் அனைத்து வர்ணனையாளர்களின் ஒப்பந்தத்தையும் வழங்குவதற்கு அல்லது நிறுத்துவதற்கு உரிமையுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தத் தொடரை ஒளிபரப்புகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Video Social Media Viral Sports Cricket Viral Video Australia Michael Clarke
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment