கர்ட் ஆங்கிள் ரசிகர்களுக்கு ‘வாவ்’ நியூஸ்! Starrcast II-ல் உங்கள் ஹீரோ!

கர்ட் ஆங்கிள் ஸ்டார்கேஸ்ட் IIல் கலந்து கொள்ளவிருக்கிறார்

Cody Rhodes Announces Top WWE Star For Starrcast II - கர்ட் ஆங்கிள் ரசிகர்களுக்கு 'வாவ்' நியூஸ்! Starrcast II-ல் உங்கள் ஹீரோ!
Cody Rhodes Announces Top WWE Star For Starrcast II – கர்ட் ஆங்கிள் ரசிகர்களுக்கு 'வாவ்' நியூஸ்! Starrcast II-ல் உங்கள் ஹீரோ!

சீனியர் மோஸ்ட் ரெஸ்ட்லிங் வீரரான கர்ட் ஆங்கிள், தனது ஓய்வை அறிவித்து இருப்பது ரசிகர்கள் அறிந்ததே. எதிர்வரும் WrestleMania தொடரோடு அவர் ஓய்வுப் பெறவிருக்கிறார்.

கர்ட் ஆங்கிள், தனது இறுதிப் போட்டியில் பாரோன் கார்பினுடன் மோதவிருப்பதாக சமீபத்தில் அறிவித்ததில் இருந்தே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

‘ஒலிம்பிக்கில் இருமுறை தங்கப் பதக்கம் வென்ற கர்ட் ஆங்கிளுக்கு, இதைவிட என்ன அவமானம் இருக்க முடியும்?’ என்ற ரீதியில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு ரிப்ளை செய்த கார்பின் “உங்கள் கடைசிப் போட்டியில் உங்களை அடக்கி ஆளப்போவது சரியாக இருக்காது என நினைக்கிறேன” என்று அடித்துவிட கர்ட் ஆங்கிள் வெறியர்கள் ஏகத்துக்கும் டென்ஷனில் உள்ளனர்.

இந்நிலையில், AEW எக்சிகியூட்டிவ் வைஸ் பிரசிடன்ட் கோடி ரோட்ஸ் தனது ட்விட்டரில், திங்கள் (ஏப்.1) இரவு ஒரு ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். அதில், “உண்மை, சத்தியமான உண்மை. கர்ட் ஆங்கிள் ஸ்டார்கேஸ்ட் IIல் கலந்துகொள்ளவிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்கேஸ்ட் II நிகழ்வு, மே 23-26 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள சீசர்ஸ் பேலஸில் நடைபெறவுள்ளது. இதில், ரெஸ்ட்லிங்-ன் இந்நாள், முன்னாள் ஜாம்பவான்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், கர்ட் ஆங்கிள் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cody rhodes announces kurt angle will participate starrcast ii

Next Story
ராஜஸ்தான் முதல் வெற்றி… ரொம்ப கஷ்டம் கோலி! யோசிக்க வேண்டிய நேரமிது!RR beat RCB by 7 Wickets
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com