Advertisment

தமிழ் பாரம்பரிய கலைகளில் உலக சாதனை... 11 வயது கோவை சிறுவன் அசத்தல்!

கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம், சுருள்வாள், மான் கொம்பு, வாள் வீச்சு என அனைத்து கலைகளையும் 11 மணி நேரம் தொடர்ந்து செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
 Coimbatore 11 year old boy create World record in Tamil traditional martial arts Tamil News

தமிழ் பாரம்பரிய கலைகளில் 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த 11 வயது கோவை சிறுவன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

Coimbatore: கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பு கிருஷ்ணன் மற்றும் லாவண்யா தம்பதியரின் மகன் கோகுல் கிருஷ்ணா. 11 வயதான சிறுவன் கோகுல் சிறுவயது முதலே அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்பம், வாள் வீச்சு என தமிழ்பாரம்பரிய கலைகளை கற்று வந்துள்ளார்.  இவரது ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர் பிரகாஷ், சிறுவனுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் கோகுல் கிருஷ்ணா, உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம், வாள் மற்றும் சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு என ஐந்து தமிழ் பாரம்பரிய ஆயுதங்களை பயன்படுத்தி ஒரே மேடையில் தொடர்ந்து பதினோரு மணி நேரம் செய்து சாதனை படைத்துள்ளார்.

அதிகாலையில் ஐந்து மணிக்கு தொடங்கி மாலை நான்கு மணி வரை சிறுவன் செய்த இந்த சாதனை "இந்தியா உலக சாதனை புத்தகம், அமெரிக்கன் மற்றும் யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது. 

உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு சிறுவன் கோகுல் செய்த இந்த சாதனையை அவரது பெற்றோர் உறவினர்கள் பள்ளி ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டு கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment